கோடிக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றிய Emergency Location சேவை!! இந்தியாவிலும் கொண்டு வந்தது கூகுள்!!

கூகுள் நிறுவனம் ஒரு வழியாக இந்தியாவிலும் தன்னுடைய எமர்ஜென்சி லொகேஷன் சேவையை (Emergency Location Service) பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த ஆண்ட்ராய்டு போன் பயன்பாட்டாளர்கள் இனி தங்களின் போனிலேயே Emergency Location சேவையை பெற முடியும். இது ஏராளமானவர்களின் உயிரை காக்கும் ஒரு விஷயமாக இருக்கும்.

இந்த எமர்ஜென்சி லொகேஷன் சேவையை ஏற்கனவே பல நாடுகளில் கூகுள் அமல்படுத்தி இருக்கிறது இந்தியாவில் அரசின் அனுமதியும் கிடைக்க வேண்டும் என்பதால் இத்தனை காலம் காத்திருந்தது .முதல் மாநிலமாக உத்திரபிரதேசத்தில் கூகுள் நிறுவனம் இந்த எமர்ஜென்சி லோகேஷ் எனப்படும் ELS சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. கூடிய விரைவில் இது நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது.

கோடிக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றிய Emergency Location சேவை..இந்தியாவிலும் கொண்டு வந்தது கூகுள்

ஒரு நபர் எதிர்பாராத எமர்ஜென்சி சூழ்நிலையில் சிக்கிக்கொண்டார். அது விபத்தாக இருக்கலாம் அல்லது உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயம் என எதுவாகவும் இருக்கலாம். ஒரு நபருக்கு போன் செய்து தன்னுடைய சூழலை அவர் விவரிக்க முடியவில்லை எனும்போது இந்த சேவை அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுடைய ஆண்ட்ராய்டு போனில் இந்த Emergency Location Service ஐ enable செய்துவிட்டால் தானாகவே உங்களுடைய ஆண்ட்ராய்டு போன் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என லொகேஷனை அனுப்பி விடும்.

உடனடியாக உங்களுக்கு காவல்துறை, ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டவர்களின் உதவி கிடைக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு அவசர கால உதவி எண் இருக்கும். அதனை நீங்கள் டயல் செய்தாலே போதும் நீங்கள் உங்கள் நிலைமையை விவரிக்க கூட வேண்டும், டயல் செய்து போன் உடனே கட் ஆனாலும் உங்களின் லொகேஷன் உதவி செய்யும் அமைப்புகளுக்கு சென்று விடும்.

அருகில் கிடைக்கக்கூடிய நெட்வொர்க் சிக்னல்களை பயன்படுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது, 50 மீட்டருக்குள் என்ற அளவுக்கு துல்லியமாக இருப்பிடத்தை காட்டுமாம். இது அவசர காலங்களில் உடனடியாக உங்களுக்கு உதவி கிடைப்பது உறுதி செய்யப்படும். அனைத்து மாநிலங்களிலும் இருக்கக்கூடிய அவசரகால அமைப்புகளை சேர்ந்தவர்கள் இத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பதால் அதற்கான பணிகளை கூகுள் நிறுவனம் மேற்கொண்டு இருக்கிறது.

தற்போது உத்திரபிரதேசத்தில் அவசரகால அழைப்பு எனண் 112ஐ இத்துடன் இணைத்து இருக்கிறார்கள். ஆனால் இதன் மூலம் கூகுள் நம் இருப்பிடத்தை தொடர்ந்து கண்காணிக்குமா என்ற கேள்வி எழும் நிலையில், அவசரகால அழைப்பு எண்ணை நீங்கள் டயல் செய்தால் மட்டுமே இது ஆக்டிவேட் ஆகும் என்றும், மற்ற சமயங்களில் செயல்படாது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+