உலகின் முன்னணி டெக் மற்றும் டிஜிட்டல் சேவை தளமான கூகுள் 2023ல் 12000 ஊழியர்களை மொத்தமாகப் பணிநீக்கம் செய்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் கூகுள் ஊழியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் முக்கியச் சேவை பிரிவான யூடியூப் தளத்தில் சுமார் 100 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த வாரம் கூகுள் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் ஆகுமென்டெட் ரியாலிட்டி சேவையில் இயங்கும் வன்பொருள் பிரிவில் இருந்து 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்தது.

இந்த நிலையில் பண மழை கொட்டும் யூடியூப் தளத்தில் இருந்து 100 பேரை பணிநீக்கம் செய்துள்ளது கூடுதல் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த பணிநீக்கம் புதன்கிழமை உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் சுந்தர் பிச்சை தலைமையிலான நிர்வாகம் 2023 பணிநீக்கத்தைப் போல் அல்லாமல் இந்த முறை ஒரு முக்கியமான சலுகை கொடுத்துள்ள காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் ஊழியர்களுக்குக் கடைசியாக ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் நிறுவனத்தின் முக்கியத்துவம் தற்போது அதிகளவில் மாறியுள்ளது எனக் கூறியுள்ளார்.
கூகுள் கடந்த 25 வருடமாகச் சர்ச், யூடியூப், விளம்பரம், கிளவுட் ஆகியவற்றை முக்கிய வர்த்தகமாக வைத்திருந்த நிலையில் தற்போது கூகுள் தற்போது செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கியமான தொழில்நுட்பத்தில் அதிகப்படியான முதலீட்டையும், கவனத்தை செலுத்த துவங்கியுள்ளது.
இதேபோல் AI பயன்பாட்டைத் தனது பிற வர்த்தகத்தில் பயன்படுத்தி ஆட்டோமேட் செய்யப்பட்டு உள்ளதால், பல பணிகள் மாயமாகி வருகிறது.
மேலும் சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூடுதல் பணிநீக்க அறிவிப்புகள் வர உள்ளது, ஆனால் இது கடந்த வருடத்தைப் போல் பெரிய அளவிலும், அனைத்து அணிகளையும் பாதிக்கும் வண்ணம் இருக்காது. இந்தப் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டு ஊழியர்கள் வெளியேறுவது தனக்கு வருத்தமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார் சுந்தர் பிச்சை.
மேலும் தற்போது யூடியூப் பிரிவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 100 ஊழியர்களுக்குக் கூகுள் நிர்வாகம் 2 மாதம் கால அவகாசம் கொடுக்கிறது, இந்தக் காலகட்டத்திற்குள் கூகுள் நிறுவனத்தின் பிற அணியில் அல்லது பிற பணியில் சேர்ந்துகொண்டால் பணியைத் தொடரலாம். இல்லையெனல் அவர்களுடைய பணிநீக்கம் உறுதி செய்யப்படும்.
இதன் மூலம் கூகுள் ஊழியர்களுக்கு இந்த 2 மாத அவகாசம் பெரும் பாக்கியமாகப் பார்க்கப்படுகிறது, காரணம் அமெரிக்காவில் 2023ல் வெறும் 700 ஐடி வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் வெளியேறினால் புதிய வேலைக்கும், இந்தச் சம்பளத்தை விட அதிகமாகச் சம்பாதிப்பது மிகவும் கடினம்.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications