உலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகுள் ஏஐ துறையில் பெரும் புரட்சி செய்து வரும் வேளையில் தொடர்ந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் அவ்வப்போது சில குறிப்பிட்ட பிரிவுகளை தேர்வு செய்து சிறு சிறு எண்ணிக்கையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் நிர்வாகம் கிளவுட் பிரிவை தேர்வு செய்து பணிநீக்கம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் கிளவுட் பிரிவில் வடிவமைப்பு அதாவது டிசைன் தொடர்பான பணிகளில் இருக்கும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. கூகுள் நிர்வாகம் தனது மொத்த வர்த்தகத்திலும் செலவுகளைக் குறைத்து, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் முதலீட்டை அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. இதன் வாயிலாக கூகுள் நிர்வாகம் அனைத்து பிரிவுகளிலும், அனைத்து மட்டத்திலும் செலவுகளை குறைக்கும் முடிவுகளை எடுத்து வருகிறது.
கூகுள் நிறுவனத்தின் இந்த பணிநீக்கம் குறித்து வெளியிட்ட அறிவிப்பை சிஎன்பிசி பார்த்துள்ளது, இந்த அறிக்கையில் இந்த பணி நீக்கம் "குவாண்டிடேட்டிவ் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் ரிசர்ச்" மற்றும் "பிளாட்ஃபார்ம் அண்ட் சர்வீஸ் எக்ஸ்பீரியன்ஸ்" ஆகிய அணிகளில் இருக்கும் ஊழியர்களுக்கு நடந்துள்ளது என அறிவித்துள்ளது.
இந்த அணிகள் கூகுள் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நடைமுறை, செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தரவு, கருத்துக்கணிப்புகள் மற்றும் டிசைன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தன.
1 கோடி பணம் சம்பாதிக்க எளிய வழி Mutual Fund
இந்த 2 அணிகளும் கூகுளின் ப்ராடெக்ட் மேம்பாட்டுக்கு முக்கிய பங்காற்றின, ஆனால் தற்போது கூகுள் ஏஐ அடிப்படையிலான சேவையில் அதிகம் கவனம் செலுத்தும் காரணத்தால் இப்பிரிவில் அதிகப்படியாக இருக்கும் ஊழியர்களை பணிநீக்க செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த இரு பிரிவின் பணிநீக்கம் மூலம் பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர், அதிலும் சில பிரிவுகளில் 50 சதவீத ஊழியர்கள் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமா கூகுள் மட்டுமல்லாமல் பலமுன்னணி நிறுவனங்கள் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. உதாரணமாக மைக்ரோசாஃப்ட் ஜூலை மாதம் 9,000 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது, இப்படி பல நிறுவனங்கள் இணைந்து அமெரிக்காவில் மட்டும் 2025ஆம் ஆண்டில் சுமார் 50000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications