உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், செவ்வாய்க்கிழமை தனது உலகளாவிய வணிகப் பிரிவில் சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வர்த்தக சந்தை நாளுக்கு நாள் மக்களை பயமுறுத்தி வருகிறது, ஒருப்பக்கம் டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பால் அந்நாட்டின் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் மூழ்கும் நிலை உருவாகியிருக்கும் வேளையில், சீனா உடனான வர்த்தக போர் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கும் நிலை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில் பெடரல் ரிசர்வ் வட்டி விகித்ததை குறைக்கும் என எதிர்பார்த்த வேளையில் அதுவும் நடக்கவில்லை.
இத்தகைய மோசமான சூழ்நிலையில் ஏஐ பயன்பாடு அனைத்து டெக் நிறுவனத்திலும் அனைத்து மட்டத்திலும் பயன்படுத்தப்பட்டு வருவதால் ஊழியர்களின் அவசியமும், தேவையும் குறைந்து வருகிறது. ஏஐ மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக அனைத்து பெரும் டெக் நிறுவனங்களும் பணிநீக்கம் செய்யும் முடிவில் தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மெட்டா, இன்டெல், மைக்ரோசாப்ட் என பல நிறுவனங்கள் பணிநீக்கம் செய்த வேளையில் தற்போது இப்பட்டியலில் கூகுள்-ம் இணைந்துள்ளது.

தி இன்ஃபர்மேஷன் இதழ் வெளியிட்ட தகவல் படி கூகுள் சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக புதன்கிழமை தெரிவித்தது. கூகிள் நிறுவனத்தில் உலகளாவிய வணிகப் பிரிவு என்பது சேல்ஸ் மற்றும் பார்ட்னர்ஷிப் பணிகளில் ஈடுப்பட்டு இருக்கும் ஊழியர்கள், இவர்கள் தான் தற்போதைய பணி நீக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிர்வாகம் செலவு குறைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் பொருட்டு இந்த பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.
கூகுள், ராய்ட்டர்ஸ்-க்கு அளித்த விளக்கத்தில், "உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவும் திறன்வாய்ந்த சேவையை வழங்குவதற்கு, பல்வேறு டீம்-களின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக சிறிய அளவிலான மாற்றங்களைச் செய்கிறோம்" என்று தெரிவித்தது. இந்த மாற்றங்கள் முலம் நிறுவனத்தின் வணிகப் பிரிவில் உள்ள 200 ஊழியர்களை பாதித்துள்ளதாக தெரிவிக்கின்றன.
கடந்த மாதம், தி இன்ஃபர்மேஷன் இதழ், கூகுளின் ஆண்ட்ராய்டு தளம், பிக்சல் ஃபோன்கள், குரோம் ப்ரவுசர் உள்ளிட்ட முக்கியமான பிராடெக்ட்கள் கொண்ட பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் டிவைசஸ் பிரிவில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் இந்திய ஊழியர்களும் சிலர் பாதிக்கப்பட்டனர்.
கூகுள் நிர்வாகம் 2023ல் உலகளவில் சுமார் 12,000 ஊழியர்களை மொத்தமாக பணிநீக்கம் செய்ய முடிவு செய்து மெகா அறிவிப்பை வெளயிட்டது. இது கூகுள் வரலாற்றில் செய்திடாத பணிநீக்கமாகும். இதில் கூகுளின் மொத்த பணியாளர்களில் 6 சதவீதம் வெளியேற்றப்பட்டனர். 2024 டிசம்பர் 31ல், ஆல்ஃபாபெட்டில் 183,323 ஊழியர்கள் இருந்ததாக பிப்ரவரி மாத அறிக்கையில் கூகுள் கூறியிருந்தது.
தொழில்நுட்பத் துறையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்களுக்கு முதலீடு செய்வது இன்றைய போட்டி சூழலில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, பல நிறுவனங்கள் தங்களுடைய நிதியை சிறப்பான முறையில் (அதிக லாபம் அளிக்கும் வகையில்) பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் நிர்வாகத்தில் அனைத்து மட்டத்திலும் செலவுகளைக் குறைக்கின்றன.
கூகுள் மட்டும் அல்லாமல் உலகளவில் இருக்கும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், டேட்டா சென்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கு அதிக செலவு செய்யும் அதே வேளையில், பிற துறைகளில் முதலீடுகளைக் குறைத்து வருகின்றன.
உதாரணமாக, ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா, ஜனவரியில் தனது 5 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதே நேரத்தில் மெஷின் லேர்னிங் இன்ஜினியர்களை வேகமகா பணியமர்த்த முன்னுரிமை அளித்தது.
மைக்ரோசாஃப்ட், செப்டம்பரில் தனது எக்ஸ்பாக்ஸ் பிரிவில் 650 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, அமேசான் பல பிரிவுகளில் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. ஆப்பிள், கடந்த ஆண்டு தனது டிஜிட்டல் சேவைகள் குழுவில் சுமார் 100 பேருக்கும் அதிகமானோரை பணிநீக்கம் செய்தது.
More From GoodReturns

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications