இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பொருளாதார மந்தநிலைக் காரணமாக அனைத்து பிரபல ஐடி நிறுவனங்களும் அதன் ஊழியர்களை கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்து வருகிறது.
அதிலும் கூகுள் பணிநீக்கக் கதைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை, பாதிப்பு அந்த அளவுக்கு அதிகமாக உள்ளது, கூகுள் பணிநீக்கத்தால் பலரும் மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த நபர் பிரமோசன் (Promotion) கிடைத்த 2 வாரங்களில் கூகுள் நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்துள்ள செய்திதான் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்திய ஊழியர்!
தன்மய் சஹய் (Tanmay sahay) ஹைதராபாத்தில் உள்ள ஐஐஐடி-இல் பி.டெக் Computer Tech (2013-17) பட்டம் பெற்றவர். அவர் சமீபத்தில் கூகுள் நிறுவனத்தால் பதவி உயர்வு பெற்றவுடன் சுவிட்சர்லாந்துக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் மாற்றப்பட்ட இரண்டு வாரங்களிலேயே சஹய் கூகுள் நிறுவனத்தின் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
LinkedIn பதிவு!
இது குறித்து சஹய் அவரின் LinkedIn பக்கத்தில் ஒரு போஸ்ட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, கூகுள் நிறுவனத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றி உள்ளதாகவும், சமீபத்தில் அவர் பதவி உயர்வுடன், சுவிட்சர்லாந்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு, அதன்பின் இரண்டே வாரங்களில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பணி அனுபவம்!
மேலும் அவர் பணி அனுபவம் குறித்தும் அப்பதிவில் வாடிக்கையாளர்களை விரும்பும் விதமாக பலவருடம் Backend SWE/SRE அனுபவத்தை (அதை எப்படி அளவிடுவது? அதை எப்படி நிலையாக வளர்ப்பது? தானியக்கமாக்குவது எப்படி?) போன்றவற்றில் அனுபவம் மிக்கவர் என்றும், கண்டெய்னர்களை வரிசைப்படுத்துதல் மற்றும் அளவிடும் அமைப்புகளை உருவாக்குவது முதல் இயந்திர கற்றல் அமைப்புகளை உருவாக்குவது வரை மிகவும் திறமையான மற்றும் நம்பகமான (அம்சம்/மாடல் கட்டிடம், மறுபயிற்சி) மாதிரி சேவைகளை உருவாக்குவதிலும் திறமை பெற்றவர் என்று கூறியுள்ளார்.
வேலைக்கு ரெடி!
அதனையடுத்து அவர் இப்பொழுதே வேலை செய்யத் தயார் என்றும் சுவிட்சர்லாந்து மட்டுமின்றி மற்ற இடங்களுக்கும் சென்று வேலை செய்யத் தயார் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் பணிநீக்கம் செய்யப்படும் இன்னும் இந்தியாவுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ திரும்பாமல் சுவிட்சர்லாந்து நாட்டிலேயே உள்ளார்.
கூகுள் பணிநீக்கம்!
கூகுள் நிறுவனம் அண்மையில் கிட்டத்தட்ட 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இதனால் உலகம் முழுவதும் கூகுள் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்தவர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். பணி இழந்தது குறித்து பல்வேறு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர்.
சுந்தர் பிச்சைக்கு கடிதம்!
கூகுள் நிறுவனம் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள நிலையில், அந்நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சைக்கு (Sundar Pichai) ஆயிரக்கணக்கான கூகுள் ஊழியர்கள் வெளிப்படையாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், ஊழியர்களின் நலன் பற்றிய கோரிக்கைகளை வைத்தது மட்டுமல்லாமல், ஊழியர்களின் ஒற்றுமையை குறிக்கும் வகையிலும் கூகுள் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications