உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் கடந்த வருடம் கொத்துக் கொத்தாக 12,000-த்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில், 2024 ஆம் ஆண்டிலும் புதிதாகப் பணிநீக்கம் செய்துள்ளது கூகுள். இதன் மூலம் ஒட்டுமொத்த டெக் சேவை துறையும் அதிர்ச்சியில் உள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் 100க்கும் அதிகமான ஊழியர்களை டிஜிட்டல் அசிஸ்டென்ட், ஹார்ட்வேர், இன்ஜினியிரிங் அணிகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். கூகுள் நிர்வாகம் தொடர்ந்து செலவின குறைப்பில் ஈடுபடுவதாக அறிவித்து இந்தப் புதிய பணிநீக்கத்தைச் செய்துள்ளது.

தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் வாய்ஸ் மூலம் செயல்படும் கூகுள் அசிஸ்டென்ட் சேவை பிரிவில் பணியாற்றியவர்களும், ஆக்மென்டெட் ரியாலிட்டி பிரிவின் வன்பொருள் அணியின் அதிகாரிகள் திடீர் பணிநீக்கத்தை எதிர்கொண்டு உள்ளனர்.
இதேபோல் கூகுள் நிறுவனத்தின் சென்டரல் இன்ஜினியரிங் பிரிவில் இருக்கும் அதிகாரிகளும் பணிநீக்கத்தை எதிர்கொண்டு உள்ளனர். இந்தப் பணிநீக்கத்தின் மூலம் நிறுவனத்தில் செயல்படும் அணிகளின் எண்ணிக்கை, அணி உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவை மறுசீரமைக்கப்பட்டு மேம்பட்ட அணியாக மாறி செயல்திறன் அதிகரிக்க உள்ளது எனக் கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதேபோல் மேலும் சில அணிகள் ஆய்வுகளைச் செய்து வருவதால் கூடுதலான பணிநீக்கங்கள் அடுத்தச் சில மாதங்களில் உலகளவில் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் அமேசான் சில முக்கியப் பிரிவில் இருந்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, இதனால் டெக் ஊழியர்கள் சற்றுப் பீதியில் தான் உள்ளனர்.
டிசம்பர் 12 ஆம் தேதி கூகுள் நிறுவனத்தில் ஆல் ஹேன்ஸ் மீட்டிங் ஆடியோ லீக் ஆனது அனைவருக்கும் நினைவிருக்கும், இந்தக் கூட்டத்தில் சுந்தர் பிச்சை முதல் பெரும் பெரும்பாலான ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதில் ஒரு ஊழியர் பணிநீக்கம் குறித்த கேள்விக்குச் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தால் மிகக் கடினமான முடிவாகும், 25 வருடத்தில் இப்படியொரு நடவடிக்கையை எடுத்தது இல்லை, ஆனால் அவசியமானதாக இருந்தது.
இதேபோல் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் அலுவலகம், லேப்டாப் ஆக்சஸ்-ஐ திடீரெனக் கட் செய்தது உண்மையில் தவறான நடைமுறை, உண்மையில் அப்படிச் செய்திருக்கக் கூடாது இந்தப் பணிநீக்கத்தை மாறுபட்ட முறையில் செய்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார் சுந்தர் பிச்சை.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications