கூகுள் நிறுவனத்தின் எவ்ரிடே ரோபோட்ஸ் (Everyday Robots) பரிசோதனை துறை துவங்கி ஓராண்டுக்கு பின் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ரோபோக்கள் ஆல்ஃபபெட்-இன் ரகசிய X மூன்ஷாட் ஆய்வகத்தில் உருவாகி வந்ததாக கூறப்படுகின்றன. இந்த துறையில் மொத்தம் 200-க்கும் அதிக ஊழியர்கள் அன்றாடம் ரோபோடிக் திட்டங்களில் பணியாற்றி வந்தனர்.
உணவக மேஜைகளை சுத்தம் செய்வது, குப்பைகளை சேகரிப்பது, கதவுகளை திறப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்த ரோபோக்களை ஆல்ஃபபெட் தற்போது பயன்பாட்டில் இருந்து நிறுத்திவிட்டது. இதன் மூலம் செலவுகளை குறைக்க கூகுள் திட்டமிடுள்ளது.
கூகுள் நிறுவனம் பணிநீக்க அறிவிப்புகளுக்கு பின்பும் செலவுகளை குறைப்பதில் மிகவும் தீவிரமாக உள்ளது. இந்த வகையில் "ரியல் எஸ்டேட் செயல்திறனை" அதிகரிப்பதற்காக சமீபத்தில் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிரந்தர சீட்-கள் நீக்கப்பட்டு சுழற்சி முறையில் அளிக்கப்பட்டு உள்ளது.
எவ்ரிடே ரோபோட்ஸ்
எவ்ரிடே ரோபோட்ஸ் திட்ட விளம்பரம் மற்றும் தகவல் பரிமாற்ற பிரவு இயக்குனர் டெனிஸ் கம்போவா இப்புதிய முடிவுகள் குறித்து கூறுகையில், இனி எவ்ரிடே ரோபோட்ஸ் ஆல்ஃபபெட் திட்டத்தின் கீழ் இருக்காது, சில தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டக் குழு கூகுள் ரிசர்ச்-க்குள் ஒருங்கிணைக்கப்படுகிறது என தெரிவித்தார்.
கொரோனா
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொழிநுட்ப துறை அசுர வளர்ச்சி கண்ட நிலையில் தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாக சரிவடைய தொடங்கியதை அடுத்து, 12 ஆயிரம் ஊழியர்களை கூகுள் பணிநீக்கம் செய்தது.
12000 ஊழியர்கள்
கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாத 12000 ஊழியர்கள் பணிநீக்க செய்தியை அறிவித்த நாளில் இருந்து டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் பணியாற்றும் இந்திய ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்திய பணிநீக்கம்
கூகுள் இந்த 12000 ஊழியர்களை அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் தனது சர்வதேச அலுவலகங்களில் பணிநீக்கம் செய்தது. இந்தியாவில் 450 முதல் 480 பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹைதராபாத் மற்றும் பெங்களூரு
இந்த பணிநீக்கத்தில் நேரடியாக மேலாளர்களின் கீழ் பணியாற்றாத ஊழியர்களை அதிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஹைதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களில் லெவல் 4 சாஃப்ட்வேர் டெவலப்பர், பேக்எண்ட் டெவலப்பர், கிளவுட் என்ஜினியர் மற்றும் டிஜிட்டல் மார்கெட்டர் பணிகளில் பணியாற்றி வந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
டெக் நிறுவனங்கள்
கூகுள் மட்டுமின்றி டிவிட்டர், மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் என பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிருவனங்களும் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பொருளாதார மந்தநிலை, சந்தையில் நிலையற்ற சூழல் காரணமாக உலகளவில் பல்லாயிரத்திற்கும் அதிகமானோர் வேலையை இழந்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications