கூகுள் நிறுவனம் பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆல்பாபெட் தொழிலாளர்கள் சங்கம் (AWU) கூகுளின் முடிவினை விமர்சித்துள்ளது.
கூகுள் ஊழியர்களின் AWU சங்கம், பணி நீக்கங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றது. இந்த முடிவு நிறுவனத்தின் பணியாளர்களை பெரிதும் பாதிக்கும் என ஊழியர் சங்கம் வாதிட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் இன்க், அதன் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொருளாதார மந்தம்
உலகளவில் நிலவி வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க பெரு நிறுவனங்கள் பலவும், செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பணி நீக்கத்தினை கையில் எடுத்துள்ளது. பல நிறுவனங்களும் பணி நீக்கம் இருக்கலாம் என அறிவித்துள்ளன.
சுந்தர் பிச்சை மெயில்
அந்த வகையில் கூகுள் நிறுவனத்தில் பணி நீக்க அறிவிப்பானது வந்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சில தினங்களுக்கு முன்பு சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பிய மெயிலில், சுமார் 12,000 பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக அனுப்பியுள்ளார்.
விடைபெறும் நேரம்
திறமையான ஊழியர்களிடம் விடைபெறும் நேரம் இது. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் என மெயில் கேட்டிருந்தார். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு முழுப் பொறுப்பும் நானே. கடினமாக உழைத்த ஊழியர்களை அனுப்புவது எனக்கு வருத்தமளிக்கிறது. இது ஊழியர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும். அதற்கு நானே முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றும் சுந்தர் பிச்சை மெயிலில் கூறியுள்ளார்.
முதலீடுகள் அதிகரிக்கலாம்
கடந்த 2 ஆண்டுகளாக பெரியளவில் வளர்ச்சியினை கண்டோம். ஆனால் நடப்பு ஆண்டில் அப்படியில்லை. சர்வதேச அளவில் நிலைமை பதற்றமான சூழ்நிலையில் இருந்து வருகின்றது. எனினும் தொடர்ந்து AI பிரிவில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் சங்கத்தின் வாதம்
இதற்கிடையில் தான் இந்த பணி நீக்கம் குறித்து 12,000 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்த நிலையில், 17 பில்லியன் டாலர் லாபம் ஈட்டிய நிறுவனத்தின் இந்த செயல் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயல். கூகுள் நல்ல லாபத்தில் உள்ள ஒரு நிறுவனம். இது பணி நீக்கம் செய்வது தேவையற்ற செயல். நிறுவனம் எளிதாக அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும் என தொழிலாளர் சங்கம் வாதிட்டுள்ளது.
கூடுதல் ஆதரவு வேண்டும்
மேலும் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையில் வெளிப்படையாக இல்லை. கூகுள் இது குறித்து வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. இது அவசியமானதா? என்பது குறித்தும் கருத்து இல்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும் என்று தொழில்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications