உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமாக இருக்கும் கூகுள்-ன் தாய் நிறுவனமான ஆல்பபெட்-ன் சந்தை மதிப்பு ஒரே நாளில் சுமார் 100 பில்லியன் டாலர் அளவிலான இழப்பை சந்தித்துள்ளது.
இதற்குக் காரணம் திங்கட்கிழமை OPENAI நிறுவனத்தின் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் சாட்பாட்-க்குப் போட்டியாகக் கூகுள் அறிமுகம் செய்த Bard தளத்தின் மூலம் இந்தப் பெரும் சரிவு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சுந்தர் பிச்சைக்குப் புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு
டெக் துறையின் அடுத்தக்கட்ட வளர்ச்சி செயற்கை நுண்ணறிவு வாயிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் பல சிறு வேலைவாய்ப்புகள், குறிப்பாக எளிதாகச் செய்யக்கூடிய பணிகள் அனைத்தும் இந்தச் செயற்கை நுண்ணறிவு சேவைகள் மூலம் ஈடு செய்யப்படும் என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் தற்போது மக்கள் இணையதளத்தைப் பயன்படுத்தும் முறையை மொத்தமாக மாற்றும் அளவிற்கு AI CHATBOT உருவாகி வருகிறது.
கூகுள் BARD
இந்த நிலையில் ChatGPT-க்குப் போட்டியாகக் கூகுள் அறிமுகம் செய்த BARD-ல் கோளாறு ஏற்பட்ட நிலையில் ஒரே நாளில் 100 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது. கூகுளின் Bard Chatbot விளம்பரம் தவறான தகவல்-ஐ காட்டிய காரணத்தால் AI வல்லுனர்கள் கடுமையாக விமர்சிக்கத் துவங்கினர்.
ஆல்பபெட் பங்குகள் சரிவு
இதன் எதிரொலியாகவே ஆல்பபெட் பங்குகள் புதன்கிழமை வர்த்தக முடிவில் 7.68 சதவீதம் சரிந்து 99.37 டாலருக்கு சரிந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் 103.14 டாலரில் இருந்து 98.04 டாலர் வரையில் ஆல்பபெட் பங்குகள் சரிந்துள்ளது.
சுந்தர் பிச்சை
கூகுள் நிர்வாகம் சுந்தர் பிச்சை-க்கான சம்பளத்தில் பெரிய மாற்றத்தைச் செய்துள்ள நிலையில் தற்போது AI CHATBOT பிரிவில் ஏற்பட்டு உள்ள போட்டியில் கூகுள் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற நெருக்கடி உள்ளது.
சுந்தர் பிச்சைக்கு நெருக்கடி
இந்த நிலையில் கூகுள் bard தளத்தில் தவறான தகவல் வந்த காரணத்தால் ஒரே நாளில் 100 பில்லியன் டாலர் அளவிலான இழப்பு ஏற்பட்டு உள்ளது சுந்தர் பிச்சைக்குப் பெரிய நெருக்கடியாகவே விளங்குவது மட்டும் அல்லாமல் புதிய பிரச்சனையாகவே உள்ளது.
தவறான தகவல்
சரி என்ன பிரச்சனை, திங்கட்கிழமை கூகுள் அறிமுகம் செய்த Bard தளம் குறித்துக் கூகுள் தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்ட GIF பதிவில் தவறான தகவல் இருந்ததை அடுத்து நெட்டிசன்களும், டெக் வல்லுனர்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
மைக்ரோசாப்ட் ChatGPT
மைக்ரோசாப்ட் ChatGPT என்ற சிறப்பாக இயங்கும் தளத்திற்கு எதிராகக் கூகுள் எப்படிப் பதிலடி கொடுக்கப்போகிறது என எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது இதுபோன்ற பிரச்சனைகள் கூகுள் பங்கு மதிப்பைப் பெரிய அளவில் பாதிப்பது இயல்பான ஒன்று என டிரிப்பிள் டி டிரேடிங் நிறுவனர் டென்னிஸ் தெரிவித்துள்ளார்.
AI Race-ல் யாருக்கு வெற்றி
டெக் நிறுவனங்கள் மத்தியில் உருவாகியுள்ள AI Race-ல் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும் வேளையில் கூகுள் தனது இலவச சேவை மற்றும் விளம்பர கட்டமைப்பு மூலம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறக் கூடும் என இந்தப் போட்டியில் வெற்றி அடையும் எனக் கணிக்கப்பட்டு இருக்கும் வேளையில் இந்தக் கோளாறு கூகுள் பங்கு மதிப்பில் பெரிய ஓட்டையை உருவாக்கியுள்ளது.
மைக்ரோசாப்ட்
ஆனால் ChatGPT தளத்தின் அறிமுகத்தின் போதும் இதேபோன்ற பிரச்சனைகள் இருந்தது, ஆனால் இது மைக்ரோசாப்ட்-ஐ பாதிக்கவில்லை, காரணம் OPENAI நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் முதலீடு மட்டுமே செய்துள்ளது. ஆனால் கூகுள் BARD தனது சொந்த தயாரிப்பு என்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. கூகுள் பங்குகள் சரிவுக்கு இதை விட முக்கியமான காரணம் உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications