உலகளவில் தற்போது பெரு பேசுபொருளாக இருப்பது OpenAI நிறுவனத்தின் ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான். இதற்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், Bard என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு மிக்க தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த பார்ட் தளம் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் தற்போது சோதனை முயற்சியாக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பல வருடங்களுக்கு முன்பே 2 கூகுள் இன்ஜினியர்கள் ChatGPT போன்ற தளத்தை உருவாக்கியதாகவும், பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக இச்சேவை தளத்தை கூகுள் நிறுவனம் மூடிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த வேகமாக இயக்கும் உலகில் மாற்றத்தையும் வாய்ப்புகளையும் எப்பதும் நழுவ விடக்கூடாது. இப்படி இதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால் ChatGPT மூலம் கூகுள்-க்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் அல்லாமல் கூகுள் மூலம் யாஹூ நிறுவனத்திற்கு ஏற்பட்ட பாதிப்பும் உருவாகும்.
மைக்ரோசாஃப்ட் - கூகுள்!
கூகுள் நிறுவனமும் தற்போது செயற்கை நுண்ணறிவு மிக்க தளத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு Bard என்று பெயரிடப்பட்டுள்ளது. எளிமையான வார்த்தைகளில் சொல்லப்போனால், கூகிள் பார்ட் என்பது AI தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்போட் ஆகும், இது பல கேள்விகளுக்கு உரையாடல் மொழியில் தானாக பதில்களை வழங்கும்.
Microsoft திட்டம்
Microsoft நிறுவனத்தின் பெரும் முதலீட்டில் இயங்கி வரும் OpenAi நிறுவனத்தின் ChatGPT தொழில்நுட்பம் உலகளவில் வேகமாக 10 லட்சம் பயனர்களை பெற்று சாதனை புரிந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை Google நிறுவனத்திற்கு போட்டியாக Microsoft கொண்டு செல்கிறது. தற்போது மைக்ரோசாப்ட் தனது BING பிரவுசர் உடன் ChatGPT தொழில்நுட்பத்தை இணைத்துள்ளது.
முன்னாள் ஊழியர்கள்!
2018 ஆம் ஆண்டில், கூகுளில் ஆராய்ச்சிப் பொறியாளராக இருந்த டேனியல் டி ஃப்ரீடாஸ், மனிதர்கள் பேசும் விதத்தைப் பிரதிபலிக்கும் உரையாடல் சாட்போட்டை உருவாக்கும் குறிக்கோளுடன் AI திட்டத்தில் பணியாற்றத் தொடங்கினார் என்றும் அதன்பின் கூகுளின் AI ஆராய்ச்சிப் பிரிவின் மென்பொருள் பொறியாளரான Noam Shazeer திட்டத்தில் சேர்ந்தார் எனவும் தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கைகள் கூறுகின்றன.
டி ஃப்ரீடாஸ் மற்றும் ஷாசீர்
டி ஃப்ரீடாஸ் மற்றும் ஷாசீர் உருவாக்கிய அந்த AI க்கு மீனா என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால் பல்வேறு காரணங்களால் சீனியர் அதிகாரிகள் இத்தொழில்நுட்பத்தில் பிழை இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து அவர்கள் 2021 ஆம் ஆண்டு கூகுளை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
AI மீனா
டி ஃப்ரீடாஸ் மற்றும் ஷாசீர் உருவாக்கிய அந்த AI மீனா மூலம் பல துறை குறித்து கேள்விகள் கேட்டு அதற்கான பதில்களை பெற முடியும். ஆனால் டி ஃப்ரீடாஸ் மற்றும் ஷாசீர் முயற்சிகள் அனைத்தும் அதை ஒரு ப்ராடெக்ட் ஆக கொண்டு வருவது தான், ஆனால் கூகுள் நிர்வாகம் இதை LaMDA என்ற தொழில்நுட்பமாக மாற்றி அறிவிப்பை வெளியிட்டது.
சுந்தர் பிச்சை
டி ஃப்ரீடாஸ் மற்றும் ஷாசீர் உருவாக்கிய AI மீனா-வை ப்ராடெக்ட் ஆக அறிமுகம் செய்ய பல முறை முயற்சி செய்து தோல்வி அடைந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு இருவரும் கூகுளை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அவர்கள் வெளியேறும் போது கூட சுந்தர் பிச்சை அவர்களை தொடர்ந்து நிறுவனத்தில் இருக்குமாறும், வெளியேற வேண்டாம் எனவும் கேட்டுகொண்டு உள்ளார். ஆனாலும் வெளியேறி ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கினர்.
தொழில்நுட்ப மாற்றங்கள்
தற்போது Bard-ன் அடிப்படை தொழில்நுட்பமாக LaMDA விளங்குகிறது. டி ஃப்ரீடாஸ் மற்றும் ஷாசீர் உருவாக்கிய ப்ராடெக்-ஐ பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் உருவாக்கிய AI ஒரு வருடத்திற்கு முன்பே மூடப்பட்டுவிட்டதாகவும் தரவுகள் கூறுகின்றன. எதிர்கால தொழில்நுட்ப மாற்றங்களையும், தேவைகளையும் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சரியாக புரிந்துக்கொள்ள முடியாமல் கைவிட்டுவிட்டால் கூகுள்-க்கு போட்டியாக ChatGPT போன்ற சேவைகள் உருவாகும்.
AI chatbot!
கூகுளின் Brad, OpenAi ChatGPT செய்வது போலவே கடினமான தகவல்களை மக்களுக்கு புரியும் வகையில் சுலபமாக தெரிவிக்க Google உருவாக்கியது. ஆனால் இதில் பல கோளாறுகள் இருப்பது மூலம் Google சற்று அவசரப்பட்டு வெளியிட்டது போல தெரிகிறது. இருந்தாலும் இப்போதைக்கு AI கருவியில் சிறந்த கருவியாக OpenAI ChatGPT இருக்கிறது.
LaMDA அறிமுகம்
மேலும், பயனர்கள் தரப்பில் இருந்தும் கருத்துகள் வரவேற்கப்படுகிறது. LaMDA ஆல் இயக்கப்படும் Google Bard க்கான கருத்துகளும் கூகுள் நிறுவனத்திற்கு முக்கியமானது. 2021 இல் LaMDA ஐ வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
LaMDA என்றால் என்ன..?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, LaMDA (Language Model for Dialogue Applications) லேம்டா எனப்படும் அடுத்த தலைமுறை மொழி மற்றும் உரையாடல் திறன்களை வெளிப்படுத்தும் தளத்தை Google நிறுவனம் வெளியிட்டது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications