உலகின் முன்னணி சர்ச் இன்ஜின் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் தனது ஊழியர்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கோவிட் 19 வேக்சின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றாதவர்களுக்குச் சம்பள குறைப்பு மட்டும் அல்லாமல்
இந்த அறிவிப்பைக் கண்டு ஆல்பபெட் நிறுவனத்தின் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கூகுள் நிறுவனம்
கூகுள் நிறுவனம் டிசம்பர் 3ஆம் தேதி கோவிட் வேக்சின் செலுத்தியதற்கான ஆவணத்தைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் கோவிட் வேக்சின் போடாமல் இருப்பதற்கான மெடிக்கல் சர்டிபிகேட் அல்லது மதம் சார்ந்த காரணங்களான ஆவணத்தையும் சமர்ப்பிக்கும் படி அனைத்து ஊழியர்களுக்கு மெமோ அனுப்பியுள்ளது.
ஆவணங்கள்
கூகுள் நிர்வாகம் குறித்த நாளுக்குப் பின், சரியான ஆவணங்களைச் சமர்ப்பிக்காத ஊழியர்களைத் தொடர்பு கொண்டு விசாரிக்கும் போது பலர் முறையான வேக்சின் போட்டுக்கொள்ளாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதைப் பொருத்திக்கொள்ளாத கூகுள் நிர்வாகம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணிநீக்கம்
ஜனவரி 18ஆம் தேதிக்குள் கூகுள் நிறுவனத்தின் வேக்சின் விதிமுறைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யாதவர்கள் 30 நாள் paid administrative leave-ல் வைக்கப்படுவார்கள் என்றும், அதைத் தொடர்ந்து 6 மாதம் unpaid personal leave-ல் அளிக்கப்படும், இதைத் தொடர்ந்து கட்டாயம் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கூகுள்
இதனால் அனைத்து கூகுள் ஊழியர்களும் வேக்சின் செலுத்திக்கொள்ளத் துவங்கியுள்ளனர். கூகுள் சில நாட்களுக்கு முன்பு தான் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளது. மேலும் கூகுள் ஹைபிரிட் மாதிரியை அமல்படுத்தி வாரத்திற்கு 3நாள் மட்டும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications