தப்பு கணக்கு போட்ட கூகுள்.. ஊழியர்கள் புலம்பல்..!

ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி ஒரு மாதமான நிலையில், கூகுளின் முன்னாள் ஊழியர்களில் பலர் மிக முக்கியமான குற்றச்சாட்டைக் கூகுளின் மீது தெரிவிக்கின்றன.

அவர்கள் தங்களுக்கு ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட பணிநீக்க வெகுமதியை அதாவது severance pay கணக்கிட்டத்தை விட மிகச் குறைந்த அளவிலான தொகையைக் கூகுள் அளிப்பதாகவும், தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்தத் தகவல் வெளியான அடுத்தச் சில நாளிலேயே கூகுள் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தகுந்த விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது கூகுள் severance pay கணக்கிட்டத்தில் தவறு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பல ஆயிரம் டாலர்

பல ஆயிரம் டாலர்

கூகுள் நிறுவனம் இருமுறை பங்கு மானியங்களைக் கணக்கிட்ட காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட பல ஊழியர்கள் எதிர்பார்த்ததை விடப் பல ஆயிரம் டாலர்களைக் குறைவாகப் severance pay தொகையைப் பெற்றுள்ளனர்.

பணிநீக்க வெகுமதி

பணிநீக்க வெகுமதி

பணிநீக்க வெகுமதியை கணக்கிடும் முறை வெளிப்படையாகத் தங்களுடைய நிறுவனத்தின் support தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த support தளத்தில் நாங்கள் தெரிவித்த கணக்கிடும் முறை மற்றும் பிரிப்புத் தொகுப்பு என்பது சரியாகவே இருந்தது. ஆனால் நாங்கள் அனுப்பிய மின்னஞ்சலில் அந்த விபரம் தவறாகப் பிரதிபலித்தது எனக் கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் விளக்கம் கொடுத்துள்ளது.

குழப்பமோ குழப்பம்

குழப்பமோ குழப்பம்

பிசினஸ் இன்சைடர் அறிக்கையின்படி, கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய ஆரம்பக்கட்ட மின்னஞ்சலில் தவறான எண்ணிக்கையிலான பங்குகள் குறிப்பிடப்பட்டிருப்பதைக் தெரிவித்து, இதன் வாயிலாகக் கூகுள் வெளியேறிய தனது முன்னாள் ஊழியர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

40 சதவீத பாதிப்பு

40 சதவீத பாதிப்பு

புதிய மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி முன்னர் குறிப்பிட்டதை விடப் பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் நிறுவன ஊழியர்கள் குறைந்தபட்சம் 40% குறைவான பங்குகளைப் பெறும் வகையில் அமைந்தது. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போன்று உள்ளது எனக் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் தெரிவிக்கின்றார்.

பிச்சையின் மின்னஞ்சல்

பிச்சையின் மின்னஞ்சல்

உலகின் மிகப் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், ஜனவரி மாத மத்தியில் அதன் மொத்த பணியாளர்களில் 6% பேரை பணிநீக்கம் செய்தது. ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை இந்த நிலைமை குறித்து 'ஆழ்ந்த வருந்துகிறேன்' என்று கூறினார்.

உள்ளூர் விதிமுறைகள்

உள்ளூர் விதிமுறைகள்

இது குறித்து அவர் அனுப்பிய மின்னஞ்சலில் உள்ளூர் விதிமுறைகளுக்கு இணங்க பணிநீக்க வெகுமதி கணக்கிடப்படும் என்கிற விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கான severance pay தொகையை ஊழியர் பணியாற்றும் பகுதிக்கு அடிப்படையில் கணக்கிடும், அவர்களுக்கான நிறுவன பங்குகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு அளிப்பதாகத் தெரிவித்து இருந்தது.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்

அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு முழு அறிவிப்புக் காலத்திற்கு (குறைந்தபட்சம் 60 நாட்கள்) ஊதியம் வழங்கப்படும். அதோடு மட்டுமல்ல பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆறு மாத சுகாதாரப் பாதுகாப்பு, வேலை வாய்ப்புச் சேவைகள் மற்றும் குடியேற்ற ஆதரவு ஆகியவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 16 வார சம்பளம்

16 வார சம்பளம்

கூகுளில் 16 வார சம்பளம் மற்றும் ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டிற்கு இரண்டு வாரங்கள் எனத் தொடங்கும் ஒரு severance pay தொகையை வழங்குவோம் எனக் கூகுள் அறிவித்து இருந்தது.

போனஸ் மற்றும் விடுமுறை

போனஸ் மற்றும் விடுமுறை

அதோடு மட்டுமல்ல குறைந்தபட்சம் 16 வாரங்களுக்கு GSU வெஸ்டிங்கைத் துரிதப்படுத்துவோம். நாங்கள் 2022ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் மீதமுள்ள விடுமுறை காலத்திற்கும் சம்பளம் வழங்குவோம் எனக் கூகுள் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிடப்படுகிறது.

காலம் மாறுமா?

காலம் மாறுமா?

மைக்ரோசாப்ட், அமேசான், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களின் இதே போன்ற அறிவிப்புகளுக்கு மத்தியில் கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பானது மிகப் பெரிய பணிநீக்க அறிவிப்பாகும். தொழில்துறையின் இருண்ட காலத்திற்கு மத்தியில் இந்த அமைப்புகள் தங்கள் செயல்பாட்டை இறுக்குவதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+