Google: 50 பேரை திடீர் பணிநீக்கம் செய்த சுந்தர் பிச்சை.. மைக்ரோசாப்ட் பங்கு முடிந்தது, இப்போ கூகுள்!

உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான கூகுள் தனது 25 வருட வர்த்தக வரலாற்றில் எப்போதும் செய்திடாத வகையில் இந்த வருட துவக்கத்தில் கனத்த இதயத்துடன் சுமார் 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது அமெரிக்க பொருளாதாரம் மந்தமடைய துவங்கியது காரணமாகவும், வட்டி விகிதம் அதிகரித்துள்ளது காரணமாகவும் பல நெருக்கடிகளை பெரு நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகிறது.

கடந்த 10, 15 வருடமாக கிட்டத்தட்ட 0 சதவீத வட்டியில் அமெரிக்க நிறுவனங்களும், அமெரிக்க பொருளாதாரமும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த நிலையில், வட்டி உயர்வுக்கு பின்பு தான் அதன் உண்மையான நிலை வெளிச்சத்திற்கு வருகிறது. இப்படியிருக்கையில் வருடத்தின் துவக்கத்திலேயே அனைத்து முன்னணி அமெரிக்க டெக் நிறுவனங்களும் வரலாறு காணாத வகையில் பணிநீக்கம் செய்த நிலையில் இப்போது 2வது சுற்று பணிநீக்கத்தை துவங்கியுள்ளதாக தெரிகிறது.

Google: 50 பேரை திடீர் பணிநீக்கம் செய்த சுந்தர் பிச்சை.. மைக்ரோசாப்ட் பங்கு முடிந்தது, இப்போ கூகுள்!

இன்று வெளியான தகவல் படி சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் சுமார் 40 முதல் 45 ஊழியர்களை தனது கூகுள் நியூஸ் பிரிவில் இருந்து பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட்-ன் ஊழியர்கள் சங்கத்தின் செய்திதொடர்பாளர் வெளியிட்டார். சில நாட்களுக்கு முன்பு தான் மைக்ரோசாப்ட் 2வது சுற்று பணிநீக்கத்தை துவங்கி நிலையில் இப்போது கூகுள் தனது பங்கு பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.

மேலும் கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய பணிநீக்கத்தை கூகுள் செய்திதொடர்பாளரும் உறுதி செய்துள்ளதாக சிஎன்பிசி தெரிவித்துள்ளது. கூகுள் நியூஸ் பிரிவு தற்போது மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று வருகிறது, குறிப்பாக ஆசியா மற்றும் இந்தியாவில் அதிகப்படியான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில் கூகுள் நியூஸ் பிரிவில் பணிநீக்கம் செய்ய முக்கிய காரணமாக இருப்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

கூகுள் நியூஸ் பிரிவில் 40-45 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டாலும், இன்னும் நுற்றுக்கணக்கான ஊழியர்கள் இப்பிரிவில் பணியாற்றி வருகிறார்கள் என கூகுள் செய்தி தொடர்பாளர் உறுதி அளித்துள்ளார். மேலும் கூகுள் நியூஸ் பிரிவு தங்களுடைய நீண்ட கால முதலீடுகளில் மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளார். வர்த்தகத்தையும் நிர்வாகத்தையும் சீரமைக்க எடுக்கப்பட்டு உள்ளது, இதனால் சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்தில் மைரோசாப்ட் தனது லின்கிடுஇன் பிரிவிலும், குவால்காம், பேன்ட்கேப் மற்றும் ஸ்டேக் ஓவர்ஃபலோ ஆகிய நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ப்ரொபஷனல் சோஷியல் நெட்வொர்க் தளமான லின்கிடுஇன் தளத்தில் சுமார் 700 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவித்த்துள்ளது. இந்த பணிநீக்கம் இந்நிறுவனத்தின் இன்ஜினியரிங் பிரிவில் அதிகமாக இருக்கும் என தெரிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+