சான் பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனம் தங்களுடைய மென்பொருளுக்கான கோட்களை உருவாக்குவதற்கு பெருமளவில் செயற்கை நுண்ணறிவு திறன்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள தகவலின்படி கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான 25 சதவீத கோட்களை செயற்கை நுண்ணறிவின் மூலமே உருவாக்கி பயன்படுத்துகிறதாம்.

செயற்கை நுண்ணறிவுகளால் உருவாக்கப்படும் கோட்களை பொறியாளர்கள் மதிப்பாய்வு செய்து அனுமதி தந்த பிறகே அது செயல்பாட்டுக்கு வருகிறது என்றாலும் தங்களுடைய நிறுவனம் படிப்படியாக செயற்கை நுண்ணறிவினை சார்ந்ததாக மாறி வருகிறது என சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டுக்கான நிதி அறிக்கை வெளியிடப்படும் நிகழ்வில் சுந்தர் பிச்சை இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் மூன்றாவது காலாண்டில் 88.3 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளது.இதில் சர்ச்சினை உள்ளடக்கிய கூகுள் சர்வீசஸ் 76.5 பில்லியன் டாலர்கள் வருமானத்தை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 13% அதிகம். அதே போல செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புகளை வழங்கக்கூடிய கூகுள் கிளவுட் 11.4 பில்லியன் டாலர்கள் வருமானத்தை ஈட்டி உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 35 சதவீதம் அதிகமாகும்.
இதன் மூலம் கூகுள் நிறுவனம் தங்களுடைய செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளை வழங்கி கணிசமான அளவு வருமானத்தையும் லாபத்தையும் பார்ப்பது தெரியவந்துள்ளது. கூகுள் நிறுவனம் வழங்கக்கூடிய சேவைகள் அனைத்தும் தற்போது செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு மாற்றப்பட்டு விட்டன என சுந்தர் பிச்சை கூறுகிறார்.
கூகுள் சர்ச் மற்றும் கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. கூகுள் சர்ச்சில் ஏஐ அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது பயனாளர்களுக்கு தேவையான தகவல்களை தனிப்பயனாக்கப்பட்ட முறையில் வழங்குகிறது.
அதேபோல கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவுக்கான சேட் பாட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் ஜெம்ஸ் ஜெமினி ஏஐ மாடலை அடிப்படையாகக் கொண்டு இந்த ஜெம்ஸ் சேட் பாட் உருவாக்கப்பட்டுள்ளது.
இனி யூடியூப் கிரியேட்டர்கள் ஜெனரேட்டிவ் ஏஐ கருவிகளைக் கொண்டு தங்களுடைய வீடியோக்களுக்கான சம்மரி மற்றும் டைட்டில்களை எளிதாக உருவாக்க முடியும். அதே போல கூகுள் மீட்டில் ஏஐ நோட் டேக்கிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட மீட்டிங் நடக்கும்போது அதன் முக்கியமான விஷயங்களை இந்த கருவியே குறிப்புகளாக எடுத்து உங்களுக்கு வழங்கிவிடும். இவ்வாறு கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் தங்கள் பிராடெக்டுகளை மேம்படுத்தி வருகிறது.
Story Written by: Devika
More From GoodReturns

தோசை, பிரியாணிய விட்டுத் தள்ளுங்க: AI வளர்ச்சியையும் பதம்பார்க்கும் ஈரான் பிரச்சனை? எப்படி?

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?



Click it and Unblock the Notifications