கூகுள் ஃப்ளைட்ஸ் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயணிகளுக்கு மலிவான விமானங்களைக் கண்டறிய உதவும். இது உங்கள் பயணங்களின் போது பணத்தைச் சேமிப்பதை எளிதாக்குகிறது. இந்த பிளாட்பார்ம் ஏற்கனவே விலை மற்றும் வசதியை சமன்படுத்தும் வகையில் சிறந்த விமான விருப்பங்களை எடுத்துக்காட்டுகிறது. தற்போது இதில் "Cheapest" tab அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய அம்சம் எப்படி வேலை செய்கிறது என்ற விவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
புதிய அம்சம் எப்படி வேலை செய்கிறது ? கூகுள் ஃப்ளைட்ஸ்-ஐப் பயன்படுத்தி நீங்கள் விமானங்களைத் தேடும்போது, விலை மற்றும் வசதியை சேர்த்து வழங்கும் சிறந்த விருப்பங்கள் காட்டப்படும். ஆனால் இதைவிட சிறந்த சேமிப்பை வழங்குவதற்காக தற்போது இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது மூன்றாம் தரப்பு முன்பதிவு தளங்கள் மூலமாக அல்லது அதே நகரத்தில் உள்ள வேறு விமான நிலையத்திற்குத் திரும்பிச் செல்வது என உங்கள் சேமிப்பை அதிகரிக்கும் விதமாக மாற்று விருப்பங்களை வழங்குகிறது.
எனவே பயணிகள் தங்கள் மலிவான பட்ஜெட்டுக்கு ஏற்ற விமானங்களை கண்டுபிடிப்பதற்கு உதவிகரமாக இந்த "Cheapest tab" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயண விவரங்களை என்டர் செய்து சீப்பஸ்ட் டேப் என்பதை கிளிக் செய்வதன் மூலம் குறைந்த விலையிலான விமானங்களை பற்றிய விவரங்களைப் பெற முடியும். இந்த அம்சம் அடுத்த 2 வாரங்களில் உலக அளவில் வெளியிடப்பட உள்ளது. பல்வேறு நகரங்களில் உள்ள பயனர்கள் இந்த கூடுதல் சேமிப்பு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி மலிவான விமானங்களை எவ்வாறு பதிவு செய்வது?: இந்த புதிய அம்சத்தின் மூலம் மலிவான விமானங்களை பதிவு செய்வது மிகவும் சுலபமானது. வழக்கம் போல் நீங்கள் பயண விபரங்களை என்டர் செய்து தொடங்க வேண்டும். முடிவுகள் காண்பிக்கப்பட்டவுடன் "பெஸ்ட்" என்ற டேப் காண்பிக்கப்படும்.
இதில் விலை மற்றும் வசதியாகப் பயணம் செய்யும் விமானங்களின் பட்டியல் காண்பிக்கப்படும். நீங்கள் இதைவிட மிகவும் விலை மலிவான விமானங்களை கண்டறிய வேண்டும் என்றால் "Cheapest" என்ற புதிய டேப்பை கிளிக் செய்ய வேண்டும். இந்த பிரிவு அனைத்து விருப்பங்களையும் குறைந்த விலையில் பட்டியலிடும்.
நீங்கள் ஒரு பெரிய விடுமுறையை கழிக்க திட்டமிடுகிறீர்கள் என்றாலோ அல்லது விரைவாக முன்பதிவு செய்ய நினைத்தாலோ இந்த அம்சம் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் விமானங்களை கண்டறிய உதவும்.


Click it and Unblock the Notifications