மும்பை: புனேயில் உள்ள கூகுள் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக அழைப்பு விடுத்த நபரை போலீசார் இன்று மும்பையில் கைது செய்துள்ளனர்.
ஹைத்ராபாத்தை சேர்ந்த பனையம் சிவானந்த் என்பவர், மும்பையில் பிகேசி அலுவலகத்திற்கு கால் செய்த அந்த நபர், கூகுளின் புனே அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை கண்டுபிடித்த மும்பை போலீசார் பனையம் சிவானந்து மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுளுக்கு வந்த கால்
சிவானந்த் ஏன் இப்படி மிரட்டல் விடுத்தார், இது குறித்த முழு விவரங்களையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புனேவின் முந்த்வா பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் 11வது மாடியில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமையன்று இரவு ஒரு போன் கால் அழைப்பு வந்துள்ளது என Deputy Commissioner of Police (Zone V) விக்ராந்து தேஷ்முக் கூறுகிறார்.
போலீசார் சோதனை
இந்த போன் கால் வந்ததை அடுத்து போலீசார் தேடுதல் படையுடன் (Bomb Detection and Disposal Squad ), மோப்ப நாய் உள்பட புனே அலுவலகத்தினை முழுவதுமாக விரிவான சோதனையை நடத்தியுள்ளனர். இந்த விரிவான சோதனைக்கு பிறகு அங்கும் ஏதும் கிடைக்கவில்லை என தெரிகிறது.
போதையில் உளறல்
இந்த தேடுதலுக்கு பின்னர் தான் இது ஒரு பொய்யான தகவல் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தவறான தகவலை கொடுத்த அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சிவானந்த் குடிபோதையில் இருக்கும்போது இவ்வாறு செய்ததாகவும் கூறப்படுகின்றது. இதே மற்றொரு தரப்பு அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறுகின்றது.
பெரும் பரப்பரப்பு
எனினும் இந்த மிரட்டல் குறித்தான சம்பவம் குறித்து முழுமையான விவரம் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்படும் நிலையில், சிவானந்த் ஏன் இப்படி செய்தார். இவருக்கும் கூகுள் அலுவலகத்திற்கும் ஏதும் சம்பந்தம் உள்ளதா? அல்லது உண்மையில் போதையில் தெரியாமல் செய்து விட்டாரா? விசாரணை முடிந்த பின்னரே முழுமையான விவரம் தெரியவரும்.


Click it and Unblock the Notifications