Google layoff: 12000 ஊழியர்கள் பணிநீக்கம்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆல்பபெட்..!

கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பிய MEMO-வில் குறிப்பிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆல்பபெட் நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்பு அனைவரும் எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும், இந்நிறுவனத்தின் தற்போதைய பணிநீக்க அறிவிப்பு, ஏற்கனவே ஆடிப்போய் இருக்கும் தொழில்நுட்பத் துறையை மேலும் உலுக்கியுள்ளது.

12000 ஊழியர்கள் பாதிப்பு

12000 ஊழியர்கள் பாதிப்பு

கூகுள் இந்த 12000 ஊழியர்கள் பணிநீக்கத்தை recruiting, கார்ப்பரேட் செயல்பாடுகள், இன்ஜினியரிங் பிரிவு மற்றும் ப்ராடெக்ட் குழுக்கள் உட்பட நிறுவனத்தின் அனைத்து பகுதிகளையும் இந்தப் பணிநீக்கம் பாதிக்க உள்ளது.

பணிநீக்கம்

பணிநீக்கம்

மேலும் இந்தப் பணிநீக்கங்கள் உலகளவில் இருக்கும் அனைத்து கூகுள் அலுவலகத்தையும் பாதிக்கும் என்பது மட்டும் அல்லாமல் அமெரிக்க ஊழியர்களை உடனடியாகப் பாதிக்கும் என்று கூகுள் தரப்பில் கூறப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

தற்போது சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பிய MEMO-வில், பணிநீக்கத்தில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் அடுத்த வேலைவாய்ப்பைத் தேடும் வரையில் அவர்களுக்குப் போதுமான ஆதரவு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு ஹெச்1பி விசாவில் இருக்கும் ஊழியர்களுக்குப் பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

60 நாள் நோட்டீஸ் காலச் சம்பளம், severance package

60 நாள் நோட்டீஸ் காலச் சம்பளம், severance package

அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்படும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களது 60 நாள் நோட்டீஸ் காலத்திற்கான சம்பளத்தை முழுமையாக அளிக்கப்பட உள்ளது. இதோடு severance package பிரிவில் 16 வார சம்பளம் மற்றும் கூகுளில் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் 2 வாரம் வீதம் சம்பள தொகை அளிக்கப்பட உள்ளது.

இதர சேவைகள்

இதர சேவைகள்

மேலும் குறைந்தது 16 வாரங்களுக்கு GSU வெஸ்டிங்கை அளிக்கப்படும் என்று சுந்தர் பிச்சை-யின் ஊழியர்களுக்கான மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2022 போனஸ் மற்றும் மீதமுள்ள விடுமுறை நேரம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாத சுகாதாரம், வேலை வாய்ப்புச் சேவைகள் மற்றும் குடியேற்ற ஆதரவை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

year end போனஸ் தொகை

year end போனஸ் தொகை

மேலும், அமெரிக்காவைத் தாண்டி பிற நாடுகளில் பணிநீக்கம் எதிர்கொள்ளும் அனைத்து ஊழியர்களுக்கும் தத்தம் நாடுகளுக்கான ஏற்ப ஊழியர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. மேலும் கூகுள் நிர்வாகம் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கான year end போனஸ் தொகையில் கை வைத்துள்ளது.

டெக் ஊழியர்கள்

டெக் ஊழியர்கள்

ஏற்கனவே டெக் ஊழியர்கள் கதறி வரும் நிலையில் மைக்ரோசாப்ட் பணிநீக்கம் மூலம் லின்கிடுஇன் தளத்தில் மொத்தமும் ஊழியர்களின் கண்ணீர் பதிவாகவே உள்ளது. மைக்ரோசாப்ட் முதல் சுற்றில் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் 3வது பணிநீக்க சுற்றில் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

இதைத் தொடர்ந்து சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகுள் ஒரே அறிவிப்பில் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்கா முதல் இந்தியா வரையில் அனைத்து டெக் ஊழியர்களையும் பாதிக்கும்.

பட்டியலில் இணைந்தது

பட்டியலில் இணைந்தது

கூகுள் பணிநீக்க அறிவிப்பு மூலம் உலகின் முன்னணி டெக் நிறுவனங்களின் பணிநீக்கம் பட்டியலில் இணைந்துள்ளது. உலகப் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தின் வீழ்ச்சிக்கு மத்தியில் அளவுக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

பெரிய டெக் சேவை நிறுவனங்கள்

பெரிய டெக் சேவை நிறுவனங்கள்

மைக்ரோசாப்ட், மெட்டா பிளாட்பார்ம்ஸ், ட்விட்டர், அமேசான்.காம், டெஸ்லா, போன்ற பெரிய டெக் சேவை நிறுவனங்கள் உடன் தற்போது சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும் இணைகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+