கூகுள் பே இந்திய மக்களின் முக்கிய பேமெண்ட் தளமாக இருந்தாலும் அமெரிக்கா முதல் உலகின் பல நாடுகளில் இச்சேவையை செயல்பட்டு வருகிறது. கூகுள் பே மக்கள் மிகவும் ஆர்வமாக பயன்படுத்த முக்கியமான காரணம் ஆரம்பத்தில் கூகுள் ஸ்கிராச் கார்டு மூலம் கூகுள் கொடுத்த போனஸ் தொகை தான்.
இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கூகுள் பே வாடிக்கையாளர்களுக்கு போனஸ் தொகையை கூகுள் வாரி வழங்கி வருகிறது, உதாரணமாக ஒருவருக்கு பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் 1072 டாலர் அதாவது 88000 ரூபாய் வரையில் போன்ஸ் அதாவது Rewards ஆக வழங்கப்பட்டு உள்ளது.

இந்த Rewards தொகையின் கீழ் Dogfooding the Google Pay remittance experience என்ற வாசகமும் இருந்துள்ளதாக பலர் ரெட்டிட் தளத்தில் பதிவிட்டு உள்ளனர். இந்த செய்தி அமெரிக்காவில் கூகுள் பே வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது மட்டும் அல்லாமல் பலரும் ஆர்வமுடன் அதிகளவில் கூகுள் பே செயலியை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
சரி Dogfooding என்றால் என்ன என்ற கேள்வி பலருக்கும் வந்திருக்கும். Dogfooding என்றால் ஒரு சேவையை மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்வதற்கு முன்பாக நிறுவன ஊழியர்கள் மத்தியில் பரிசோதனை செய்வது தான்.

இந்த நிலையில் கூகுள் தவறுதலாக கூகுள் பே பயன்படுத்தும் மக்களுக்கு தவறுதலாக அனுப்பியுள்ளது. இந்த பிரச்சனையை தாமதமாக தெரிந்துக்கொண்ட கூகுள் நிர்வாகம் பணத்தை கிரெடிட் செய்யப்பட்ட மக்களின் ஈமெயில் தொடர்பு கொண்டு விளக்கம் கொடுத்து பணத்தை திரும்ப பெற்றுள்ளது.
கூகுளின் இந்த தவறு காரணமாக பல கூகுள் பே வாடிக்கையாளரின் கூகுள் பே வேலெட் பேலென்ஸ் 1000 டாலர் வரையில் அதிகரித்துள்ளது. ஆனா என்ன பயன் பணத்தை தான் திரும்ப பெற்றுள்ளதே, இந்தியர்களுக்கு இன்னும் அதே Better Luck Next Time! தான் வருகிறது.


Click it and Unblock the Notifications