மாசம் 5 கோடி வாடகை, 10 கோடி அட்வான்ஸ்.. யாரு சாமி நீ..? மொத்த மும்பையும் இதுதான் பேச்சு..!

இந்திய ரியல் எஸ்டேட் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது, சாமானிய மக்கள் சொந்த வீடு வாங்குவது என்பது தற்போது நாட்டின் மெட்ரோ நகரங்களில் நடக்காத ஒன்றாக மாறியுள்ளது. இதைவிட மோசமாக அலுவலகம் மற்றும் கமர்சியல் இடங்களுக்கான ரியல் எஸ்டேட் துறை மாறியுள்ளது.

கூகிள் இந்தியா மற்றும் கூகிள் கிளவுட் இந்தியா ஆகியவை மும்பையின் பாந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸ் (BKC) இல் உள்ள ஃபர்ஸ்ட் இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சென்டரில் (F.I.F.C.) தங்கள் அலுவலக இடங்களுக்கான குத்தகை ஒப்பந்தங்களைப் புதுப்பித்துள்ளனர். இந்த அலுவலகத்தின் வாடகை தான் தற்போது ஒட்டுமொத்த மும்பையின் முக்கிய விவாதமாக உள்ளது.

மாசம் 5 கோடி வாடகை, 10 கோடி அட்வான்ஸ்.. யாரு சாமி நீ..? மொத்த மும்பையும் இதுதான் பேச்சு..!

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஸ்கொயர் யார்ட்ஸ் வெளியிட்ட தகவல்படி கூகுள் நிறுவனம் தனது 2 இந்திய நிறுவனங்களுக்கான அலுவலக இடத்தை பிப்ரவரி 2025 இல் குத்தகை ஒப்பந்தங்களைப் புதுப்பித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

கூகிள் இந்தியா:

புதிய ஒப்பந்தத்தின்படி, கூகிள் இந்தியா இரண்டு தளங்களில் 1,10,980 சதுர அடி இடத்தை பெற உள்ளது. இதற்கான மாத வாடகை ரூ.3.55 கோடியை செலுத்தும். ஜூன் 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய குத்தகை ஒப்பந்தம் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கும். மேலும் இந்த இடத்திற்கு ரூ.9.64 கோடி செக்யூரிட்டி டெபாசிட் தொகையும் செலுத்தப்பட உள்ளது. குத்தகை விதிமுறைகள்படி மாத வாடகையாக ஒரு சதுர அடிக்கு ரூ.320 மற்றும் ரூ.1.87 கோடி முத்திரை கட்டணம் மற்றும் ரூ.30,000 பதிவு கட்டணமும் இதில் அடங்கும்.

கூகிள் கிளவுட் இந்தியா:

கூகிள் கிளவுட் இந்தியாவிற்கான புதுப்பிக்கப்பட்ட குத்தகையில் பாந்த்ரா கிழக்கில் உள்ள F.I.F.C. இன் ஒரு தளத்தில் 38,678 சதுர அடி பரப்பளவைக் கொண்ட அலுவலகத்தைப் பெறுகிறது. கூகிள் இந்தியாவிற்கான இடத்தைப் போலவே, இவர்களின் மாத வாடகையும் ஒரு சதுர அடிக்கு ரூ.320 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கூகிள் கிளவுட் இந்தியாவிற்கான வாடகை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 15% அதிகரிக்கும். தற்போது மாத வாடகையாக 1.24 கோடி ரூபாயும், ரூ. 3.13 கோடி செக்யூரிட்டி டெபாசிட் தொகையும் வழங்கியுள்ளனர்.

கூகுள்

இதன் மூலம் கூகிள் தனது 2 கிளை நிறுவனங்களின் அலுவலகத்திற்கு மாத வாடகையாக மொத்தம் ரூ. 4.79 கோடியை செலுத்தும். இதற்கு கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் அளவிலான டெபாசிட் செலுத்த உள்ளது.

1.99 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள F.I.F.C. அலுவலக கட்டிடத்தில் பல முன்னணி நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+