உலகின் முன்னணி தேடு பொறி நிறுவனமான கூகுள், செயற்கை நுண்ணறிவு பிரிவில் ஜீனியஸ் ஆக கருதப்படும் ஒரு நபரை 2.7 பில்லியன் டாலர்கள் (22,000 கோடியை) கொடுத்து மீண்டும் பணிக்கு அமர்த்தியுள்ளது. நோவாம் சசீர் செயற்கை நுண்ணறிவு உலகில் ஜீனியஸாக பார்க்கப்படுபவர். கடந்த 2000-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இவர் பணிக்கு சேர்ந்தார். அங்கே செயற்கை நுண்ணறிவு பிரிவில் நிபுணத்துவம் பெற்றவராகவும் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் முக்கியமான நபராகவும் இருந்து வந்தார்.
ஆனால் இவர் 2021 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். தற்போது அவரை தான் கூகுள் நிறுவனம் மீண்டும் பணிக்கு அமர்த்தியுள்ளது.நோவாம் சசீரும் அவரது சக பணியாளர் என டேனியலும் இணைந்து ஒரு சேட் பாட்டை உருவாக்கியுள்ளனர். அதனை வெளியிடும்படி நோவாம் சசீர் கேட்டுக்கொண்டார் ஆனால் கூகுள் நிறுவனம் அதனை மறுத்தது. எனவே 2021 ஆம் ஆண்டு இவர் கூகுள் நிறுவனத்தில் இருந்து விலகினார். பின்னர் அவரும் அவரது நண்பர் டேனியலும் இணைந்து கேரக்டர்.

பின்னர் அவரும் அவரது நண்பர் டேனியலும் இணைந்து கேரக்டர்.ஏஐ (Character.AI ) என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கினர். இது சிலிக்கான் வேலியின் மிகச்சிறந்த ஒரு ஏஐ ஸ்டார்ட் அப்பாக உருவானது. கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற உச்சத்தை எட்டியது.
இந்த நிலையில் கூகுள் நிறுவனம் மீண்டும் இவர்கள் இருவரையும் அழைத்துப் பேசி கூகுளிலேயே பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதன்படி நோவாம் சசீர் மீண்டும் கூகுள் நிறுவனத்தில் இணைந்து வேலை செய்வதற்கும், அவரும் அவரது நண்பரும் இணைந்து உருவாக்கிய Character.
AI தொழில்நுட்பத்தை கூகுள் பயன்படுத்திக் கொள்வதற்கும் 2.7 பில்லியன் டாலர்களை கொடுத்து கூகுள் நிறுவனம் உரிமத்தை பெற்றுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவான டீப் மைண்டில் மீண்டும் பணியை தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரிமம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து கூகுள் நிறுவனம் Character.AI நிறுவனத்தின் முழு உரிமையையும் பெற்றிருக்கிறது. நோவாம் சசீர் மீண்டும் கூகுளில் வந்து பணியாற்ற வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே கூகுள் நிறுவனம் Character.AI நிறுவனத்தை வாங்கியதாக ஊழியர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
நோவாம் சசீர் 2017 ஆம் ஆண்டில் மீனா என்ற ஒரு சேட் பாட்டை உருவாக்கினார். அது மனிதர்களுக்கு நிகரான உணர்வுகளுடன் கலந்துரையாடல்களை நடத்தும் திறன் கொண்டதாக இருந்தது. தற்போது இவர் கூகுளின் ஜெனரேட்டிவ் ஏஐ ஜெமினியின் அடுத்த பதிப்பை மேம்படுத்தி வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications