சென்னை: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.75,999 என்ற தொடக்க விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் விலை, ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது. கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இப்போது மிகவும் குறைந்த விலையில் ஆன்லைனில் கிடைக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட் போன் ஜெமினி நானோ AI தொழில்நுட்பத்தோடு விற்கப்படுகிறது.
கூகுள் பிக்சல் 8 விலை குறைப்பு: இந்தியாவில், கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ.61,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது தொடக்க விலையிலிருந்து சுமார் ரூ.14,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில் ரூ.75,999 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கூடுதலாக, ICICI பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு, ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ரூ.8,000 தள்ளுபடியையும் வழங்குகிறது. இதன் மூலம், நீங்கள் வெறும் ரூ.53,999 மட்டுமே செலுத்தி வாங்கி கொள்ளாலாம்.

கூகுள் பிக்சல் 8 ஸ்பெசிபிகேஷன்: கூகுள் பிக்சல் 8 ஆனது டென்சர் 3 சிப்செட் மற்றும் டைட்டன் M2 சிப் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.2-இன்ச் முழு HD OLED திரையில் வருகிறது. 50MP சென்சார் மற்றும் 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் இந்த போன் வருகிறது. செல்ஃபி பிரியர்களுக்கு, இது 10.5MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
பிக்சல் 8 ஆனது 4575mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 27W வேகமான சார்ஜிங் வசதியுடன் வருகிறது. வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. இருப்பினும், ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற ஸ்மார்ட்போனுடன் கூடிய சார்ஜரை கூகுள் வழங்கவில்லை. பிக்சல் 8 கால் ஸ்கிரீனிங், சர்ச், மேஜிக் எரேசர் (Magic Eraser) உள்ளிட்ட பல்வேறு கூகுள் AI அம்சங்களை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 7 ஆண்டுகள் பாதுகாப்பையும் கூகுள் உறுதி செய்துள்ளது.
மொத்தத்தில், தொடக்க விலையைக் காட்டிலும் கணிசமாக குறைந்துள்ள கூகுள் பிக்சல் 8, புதிய AI அம்சங்களுடன் சிறந்த தேர்வாக இருக்கும். குறிப்பாக, பிக்சல் 8a விலையை ஒத்திருக்கும் வகையில் தற்போதைய விலை இருப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications