ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள்-க்கு நிகரான இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் கூகுள் நிறுவனம் தனது மிகவும் பிரபலமான பிக்சல் ஸ்மார்ட்போன் தொடரின் புதிய பதிப்பான பிக்சல் 8a ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் மற்றும் நீண்ட கால ஆதரவு போன்ற சாமானிய மக்களை கவரும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை ஏற்கனவே கடுமையான போட்டியை எதிர்கொண்டு இருக்கும் நிலையில், நீண்ட கால ஆதரவு என்ற முக்கிய அமசத்தை மையமாக கொண்டு கூகுள் தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.
ஏழு ஆண்டுகள் வரையிலான மென்பொருள் ஆதரவுடன் கூகுள் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 8a ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய அதிர்வலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிர்வலை ஏற்படுத்தும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது..? வாங்க முழுசா தெரிஞ்சுக்குவோம்.
புது சிப் மற்றும் பாதுகாப்பு: பிக்சல் 8a ஸ்மார்ட்போன் கூகுள் டென்சர் G3 சிப் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த அம்சங்களை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. மேலும், ஸ்மார்ட்போனின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் டைட்டன் M2 செக்யூரிட்டி சிப் இதில் இணைக்கப்பட்டுள்ளது கூடுதல் அம்சமாகும்.
ஏழு ஆண்டுகள் சப்போர்ட்: பிக்சல் 8a ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால், இந்த ஃபோன் ஏழு ஆண்டுகள் வரை மென்பொருள் அப்டேட் மற்றும் சப்போர்ட் பெறும். இதன் கீழ், செக்யூரிட்டி அப்டேட் மற்றும் ஆண்ட்ராய்டு OS அப்டேட்கள் கிடைக்கும். இதன் மூலம், உங்கள் ஃபோன் எப்போதும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருக்கும் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது உறுதி.
விலை மற்றும் ப்ரீபுக்கிங்: பிக்சல் 8a பிளிப்கார்ட் இணையதளத்தில் முன்பதிவுக்கு கிடைக்கிறது, மே 14 முதல் விற்பனைக்கு வருகிறது. பிக்சல் 8a-ன் 128GB வேரியண்ட் ரூ. 52,999க்கும், 256GB வேரியண்ட் ரூ. 59,999க்கும் கிடைக்கும்.
ஆஃபர்: அறிமுகல் சலுகையாக, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுடன் ரூ. 4,000 மதிப்பிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ. 9,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.
பிக்சல் பட்ஸ் ஆஃபர்: மே 14 வரை பிக்சல் 8a ஐ முன்பதிவு செய்பவர்கள் ரூ.999 க்கு பிக்சல் பட்ஸ் A-சீரிஸைப் பெறலாம். பிக்சல் 8a புதிய வண்ணங்களில், லிமிடெட் எடிஷன் முறையில் அலோ மற்றும் பே ஆகிய நிறத்தில் கிடைக்கிறது. கிளாசிக் ஒப்சிடியன் மற்றும் போர்சிலின் வண்ணங்களிலும் கிடைக்கின்றன.
முக்கிய அம்சங்கள்: எதிர்பார்த்தபடி, பிக்சல் 8a பல்வேறு செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் வருகிறது. கூகுள் டென்சர் G3 சிப் மூலம் இயக்கப்படும் பிக்சல் 8a, பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ போன்ற அதே செயற்கை நுண்ணறிவு அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த ஃபோனில் 64 மெகாபிக்சல் கேமரா பிரதான லென்ஸ் மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13MP கேமரா உள்ளது.
AI கேமரா மேஜிக்: பிக்சல் 8a செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல புதுமையான கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் சில:
Best Take: பல புகைப்படங்கள் எடுக்கும்போது, சிறந்த ஷாட் தேர்வு செய்ய உதவும்.
Magic Editor: புகைப்படங்களில் உள்ள பொருள்களை மறுசீரமைப்பு செய்யவோ அல்லது மறுஅளவிடவோ அல்லது பேக்கிரவுன்டை ஹைலைட் செய்ய முதன்மைப்படுத்தப்பட்ட அமைப்புகளைப் பயன்படுத்தவோ உதவும்.
Audio Magic Eraser: காற்று, மக்கள் கூட்டம் மற்றும் பிற சத்தங்கள் போன்ற தொந்தரவு தரும் ஒலிகளை உங்கள் வீடியோக்களில் இருந்து நீக்க உதவும்.
Gemini மற்றும் பிற AI அம்சங்கள்: பிக்சல் 8a இல் ஜெமினி என்ற கூகுளின் செயற்கை நுண்ணறிவு அசிஸ்டென்ட் உள்ளது. இது பல்வேறு பணிகளுக்கு டைப் செய்ய, பேச, மற்றும் படங்களைச் சேர்க்க உதவுகிறது.
தகவலை விரைவாகக் கண்டறிய, Circle to Search அம்சமும் இதில் உள்ளது. கூடுதலாக, ஆடியோ எமோஜிகள் என்ற புதிய அம்சம் இதில் வருகிறது.
டக்கரான ஸ்கிரீன்: பிக்சல் 8a புதிய Actua டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது பிக்சல் 7a ஐ விட 40 சதவீதம் அதிக பிரகாசமானது என்று கூகுள் நிறுவனம் கூறுகிறது. இது வெளிப்புற வெளிச்சத்தில் கூட சிறந்த பார்வை அனுபவத்தை வழங்கும்.
மொத்தத்தில், பிக்சல் 8a என்பது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அம்சங்கள் நிறைந்த, நீண்ட கால மென்பொருள் சாப்போர்ட், சிறப்பான கேமரா அம்சங்கள் மற்றும் பிரகாசமான டிஸ்ப்ளே கொண்ட ஒரு சிறப்பான ஸ்மார்ட்போன்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications