உலகமே கொரோனாவால் ஸ்தம்பித்து போயுள்ள நிலையில், சிறு நிறுவனங்கள் முதல் பெரிய பெரிய கார்ப்பரேட் வரை பொருளாதார ரீதியாக பெரிதும் பின்னடைவை சந்தித்துள்ளன.
இதன் காரணமாக ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களால் முடிந்தவரை செலவினை குறைக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதிலும் சேவையை துறையை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிரடியாக பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதை காண முடிகிறது.
தீவிர நடவடிக்கை
இந்த நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையினை சேர்ந்த ஜாம்பவான்கள் கூட, தங்களால் முடிந்த வரை தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தினை குறைத்து வருகின்றனர். இதற்கு IT ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனமும் விதிவிலக்க என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. கூகுள் நிறுவனம் நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில் மார்கெட்டிங் செலவினை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பங்கு விலை சரிவு
அதோடு புதியதாக பணியமர்த்தல் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அது முழு நேர பணியாளர்களோ அல்லது பகுதி நேர ஊழியர்களையோ நடப்பு ஆண்டில் புதியதாக பணியமர்த்தல் என திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு மார்கெட்டிங் ஊழியர்களுக்கு செலவுகளை குறைப்பதாக ஊழியர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த செய்திகள் வெளியாகிய பின்னர் கூகுளின் பங்குகள் கிட்டதட்ட 2% சரிவினை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் பிச்சை என்ன சொன்னார்?
கடந்த வாரத்தில் ஆல்பாஃபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி புதிய பணியமர்த்தல் தொடங்கி, இந்த ஆண்டில் புதிய சில முதலீடுகளையும் செய்வதில் இருந்து பின்வாங்க போவதாகவும் கூறியிருந்தார். மேலும் ஆக சுந்தர் பிச்சை இவ்வாறு கூறிய ஒரு வாரத்திற்கு பின்பே, தற்போது கூகுள் தற்போது சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது கவனிக்கதக்கது.
அத்தியாவசிய முதலீடு செய்வோம்
எப்படி இருப்பினும் அத்தியாவசிய சந்தைபடுத்துதலையும், பணியமர்த்தலையும் கணிசமாக குறைத்து பரிசீலனை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் பணியமர்த்தல் இல்லாவிட்டாலும் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம். ஆனால் அதிலும் கவனம் செலுத்துவோம் எனவும் சுந்தர் பிச்சை கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை
உலக மக்களையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, கூகுள் நிறுவனத்தினையும் விட்டுவைக்காது பொருளாதார ரீதியாக தாக்கி வருகிறது. எனினும் மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது கூகுள் நிறுவனம் அப்படி ஒன்றும் அதிரடியான நடவடிக்கை எடுக்கவில்லை எனலாம். ஏனெனில் பல நிறுவனங்கள் பணி நீக்கம், சம்பள குறைப்பு என தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.


Click it and Unblock the Notifications