உலகின் முன்னணி டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான கூகுள் வாடிக்கையாளர் எண்ணிக்கையை வைத்துத் தான் அதிகளவிலான வர்த்தகத்தை வருமானத்தையும் பெற முடியும், ஏற்கனவே இந்தியா உட்பட உலக நாடுகளில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ள நிலையில் அடுத்தகட்டத்திற்குக் கூகுள் செல்ல முடிவு செய்துள்ளது.
விளம்பரம், சர்ச் இன்ஜின் வர்த்தகத்தை மட்டுமே நம்பியிருந்தால் வேலைக்கு ஆகாது என உணர்ந்த கூகுள் கடந்த சில வருடங்களாகவே டிஜிட்டல் சேவைத் துறையில் இருக்கும் நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது.
இதன் படி கூகுள் நிறுவனம் அதிக டிஜிட்டல் வாடிக்கையாளர்களைக் கொண்டி இந்தியாவில் வேகமாக வளரும் டிஜிட்டல் சேவை நிறுவனத்திலும் முதலீடு செய்து வருகிறது.
இந்தியாவில் கூகுள்
கூகுள் இந்தியாவில் டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்தப் பல 10 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாகக் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் சுந்தர் பிச்சை அறிவித்துள்ள இதேவேளையில் ஜியோ உட்படப் பல டிஜிட்டல் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறது.
50-75 மில்லியன் டாலர் முதலீடு
இந்நிலையில் இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் ரீசெல்லர் பிரிவில் வேகமாக வளரும் நிறுவனமான மீஷோ-வில் கூகுள் சுமார் 50 முதல் 75 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக முன்னணி வர்த்தகப் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
டன்சோ, கிளான்ஸ்
சமீபத்தில் கூகுள் நிறுவனம் டன்சோ, இன்மொபி நிறுவனத்தின் கிளான்ஸ் ஆகிய நிறுவனத்தில் முதலீடு செய்து இந்திய டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் தனது வர்த்தக ஆதிக்கத்தைப் பதிவு செய்து வருகிறது. இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்வது மூலம் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகம் ஆகிய இரண்டையும் பெற முடியும்.
பெங்களூர் மீஷோ
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் இயங்கி வரும் மீஷோ இன்றைய மதிப்பு 4.9 பில்லியன் டாலர். செப்டம்பர் மாதத்தில் மீஷோ ஃபெடிலிட்டி, எட்ரோ சவ்ரின் உடைய பி கேப்பிடல் ஆகிய நிறுவனத்திடம் இருந்து 570 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்ற நிலையில், கூகுள் முதலீட்டையும் சேர்ந்தது 600 மில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டைத் திரட்ட உள்ளது.
யூடியூப் - சிம்சிம்
சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் முக்கிய வீடியோ சேவை தளமான யூடியூப் வீடியோ சோஷியோ காமர்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான சிம்சிம்-ஐ ஜூலை மாதத்தில் கைப்பற்றி மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?



Click it and Unblock the Notifications