உலகில் உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்று கூகுள். இதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனம் தன்னுடைய ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெறக்கூடிய நிறுவனம்.
தொடக்கத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப போட்டியில் சற்றே பின் தங்கியிருந்தாலும் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என்பது போல அடுத்தடுத்த அப்டேட்டுகளையும் கருவிகளையும் வெளியிட்டு கூகுள் மீண்டும் தன்னை டெக் உலகின் ஜாம்பவான் என நிரூபித்து விட்டது. இந்த நிலையில் கூகுள் நிறுவனம் அதன் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சைக்கு மிகப்பெரிய அளவில் சம்பளத்தை அள்ளிக் கொடுக்க முன்வந்திருக்கிறது.

கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் சுந்தர் பிச்சையின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறதாம். இதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவருக்கு 692 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறதாம். இந்திய ரூபாயின் மதிப்பில் பார்க்கும் போது 63,62,27,91,400 ரூபாய் ஆகும். இதன் மூலம் உலகிலேயே அதிக சம்பளம் பெறக்கூடிய தலைமை செயல் அதிகாரி என்ற பெருமை சுந்தர் பிச்சைக்கு கிடைக்க உள்ளது.
கூகுள் நிறுவனம் அமெரிக்கா செக்யூரிட்டிஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷனிடம் தாக்கல் செய்த அறிக்கையில் சுந்தர் பிச்சைக்கான புதிய சம்பளம் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதாவது சுந்தர் பிச்சைக்கு இந்த சம்பள உயர்வு என்பது நேரடியாக சம்பளமாக வழங்கப்படாது. நிறுவன பங்குகள் மூலம் கிடைக்கும். நிறுவனத்தின் பங்குகளில் இருக்கக்கூடிய உரிமங்கள் மூலம் இவருக்கு கிடைக்கும் வருமானம் உயரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட், இதன் இரண்டு துணை நிறுவனங்களான வெமோ மற்றும் விங்க் ஆகிய இரண்டு நிறுவனங்கள் என மொத்தம் மூன்று நிறுவனங்களில் இருந்து இவருக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இவருக்கு 175 மில்லியன் டாலர்கள் வருமானமாக கிடைக்கப் போகிறது . இந்த நிறுவனங்களின் பங்குகள் எப்படி செயல்பட போகின்றன என்பதை பொறுத்து இவருக்கு கிடைக்கக்கூடிய சம்பளம் என்பது மாறுபடும். ஒரு சராசரி கூகுள் ஊழியரின் சம்பளத்தை விட சுந்தர் பிச்சைக்கு ஆண்டுக்கு 700 மடங்கு அதிக சம்பளம் கிடைக்க போகிறதாம்.

கடந்த ஆண்டில் தான் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் சம்பளம் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு ட்ரில்லியன் டாலராக உயரும் என அறிவிக்கப்பட்டது. டெஸ்லா நிறுவனம் மஸ்கிறாக புதிய சம்பள பேக்கேஜை வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்தது. இதன்படி அவருக்கு 10 ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் கிடைக்கும் என சொல்லப்பட்டது.
அந்த வகையில் உலகின் அதிக சம்பளம் பெறும் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் இருக்கிறார். அந்த பட்டியலில் சுந்தர்பிச்சையும் இடம்பிடித்துள்ளார். ஒருபுறம் டெக் நிறுவனங்கள் ஏஐ காரணமாக கூறி ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, சம்பள உயர்வை நிறுத்தி வைப்பது என ஊழியர்கள் மீது கை வைத்து வருகின்றன, அதே வேளையில் மறுபுறம் தலைமை செயல் அதிகாரிகளுக்கு மட்டும் சம்பளத்தை வாரி இருக்கின்றன. இது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளின் சம்பளம் 1000 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது என்பது சிஎன்பிசி வெளியிடக்கூடிய தகவல் அதே வேளையில் சாதாரணமான ஒரு ஊழியரின் சம்பளம் 26 சதவீதம் தான் உயர்ந்திருக்கிறது. சராசரியாக ஒரு ஊழியர் பெறும் சம்பளத்தை விட 172 மடங்கு அதிகமாக சிஇஓ-க்களுக்கு சம்பளம் கிடைக்கிறது என்றும் அந்த செய்தி கூறுகிறது. வழக்கமான ஊழியருக்கு சம்பளம் அத்துடன் சில அலோவென்சுகள் கிடைக்கும். ஆனால் தலைமை செயல் அதிகாரிகளுக்கு சம்பளம் மட்டுமில்லாமல், போனஸ், அலோவென்ஸ், பங்கு ஒதுக்கீடு, சிறப்பு ஊதியம் என ஒரு தொகுப்பாக வழங்கப்படுகிறது
More From GoodReturns

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 முறை பதவி உயர்வு.. இதுக்கு மேல என்ன வேண்டும் சொல்லுங்க..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications

