அமெரிக்காவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான கூகுள் ஊழியர்களுக்கு நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெறுவதற்கான பரிந்துரையை கூகுள் நிர்வாகம் நீண்ட காலமாக நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது இக்கதவுகளை திறக்க முடிவு செய்துள்ளது.
ஹெச்1பி விசா மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள வேளையில், ஏஐ தொடர்பான பணிநீக்கம் கட்டுக்குள் வந்த பின்பு சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிர்வாகம் இத்த முடிவை எடுத்துள்ளது. இதோடு ஏஐ துறையில் பணியாற்றும் முக்கியமான ஊழியர்களை தக்க வைக்கவும் இந்த நிரந்தர குடியுரிமை பரிந்துரை பணிகளை துவங்கியிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் நிறுவனம் 2026இல் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப் செயல்முறையை பெரிய அளவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக H-1B விசா மூலம் கூகுள் ஊழியர்கள் எதிர்கொண்ட நிச்சயமின்மைக்கு இது நிவாரணம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதம் கூகுள் நிர்வாகம் ஊழியர்கள் மட்டத்தில் இதுக்குறித்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளதாக பிஸ்னஸ் இன்சைரட் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து 2026ல் தகுதியான கூகுள் ஊழியர்களுக்கு PERM விண்ணப்பங்களை பதிவு செய்து கிரீன் கார்டு பெற பரிந்துரைக்கும் பணிகளை தொடங்கும் என்று கூறியுள்ளது.

PERM அல்லது Program Electronic Review Management அமெரிக்காவில் வேலை அடிப்படையிலான கிரீன் கார்டு பெறுவதற்கான முக்கியமான வழி. டெக் நிறுவனங்கள் இதை பயன்படுத்தி தற்காலிக விசா ஊழியர்களை நிரந்தர குடியுரிமைக்கு மாற்றுகின்றன. கூகுள் 2026 முதல் காலாண்டில் தகுதி உள்ள ஊழியர்களுக்காக இம்மிக்ரேஷன் பணிகளை தொடங்கும் என்று தெரிகிறது. இது H-1B விசா ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆகும், கூகுள் நம்பிக்கை தருகிறது. கூகுள் இதை தொடங்கினால் மற்ற நிறுவனங்களும் இதை தொடரும்.
பல இந்திய டெக் ஊழியர்கள் H-1B விசாவில் அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் கூகுளின் இந்த அறிவிப்பு இவர்களுக்கு ஜாக்பாட் ஆக மாற்றும். இந்நிறுவனம் தகுதி அடிப்படையில் PERM விண்ணப்பங்களை பதிவு செய்யும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications