உலகின் மிகப்பெரிய டெக் மற்றும் ஏஐ சேவை நிறுவனங்களில் ஒன்றான கூகுள் செப்டம்பர் காலாண்டு முடிவில் சந்தை எதிர்பார்ப்புக்கு இணையான தனது கோட்டையான விளம்பர வருவாயை எட்ட முடியவில்லை.
இதனால் கூகுள் பங்குகள் பெரிய அளவிலான சரிவைப் பதிவு செய்துள்ளது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த டெக் துறைக்கு அதிர்ச்சி கொடுத்தது, ஆனால் மெட்டா மொத்த கதையையும் மாற்றியுள்ளது.

கூகுள் பல்வேறு டெக் சேவைகளை வழங்கி வந்தாலும் அதன் பெரும் பகுதி வருமானம் என்பது விளம்பரங்கள் வாயிலாகவே பெற்று வருகிறது. இதன் அடிப்படையில் செப்டம்பர் காலாண்டில் கூகுள் சுமார் 83.4 பில்லியன் டாலர் அளவிலான விளம்பர வருவாய் பெறும் என கணிக்கப்பட்ட நிலையில் 82 பில்லியன் டாலர் மட்டுமே பெற்றுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இதற்கு விளக்கம் அளித்த கூகுள் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியான பிலிப் ஷின்ட்லர், எதிர்பார்க்கப்பட்ட அளவை காட்டிலும் மக்கள் அதிகளவில் ஏஐ மோட் அடிப்படையிலான தேடல்களைப் பயன்படுத்தியதன் காரணமாக விளம்பர வருவாய் குறைந்துள்ளது எனத் தெரிவித்த அவர், ஏஐ சாட்பாட்-ல் விளம்பரங்களைக் கொண்டும் முயற்சிகளில் நிர்வாகம் ஈடுபட்டு வரும் வேளையில், விரைவில் சர்வதேச சந்தைகளில் சாட்பாட் சேவையில் விளம்பரங்கள் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மீண்டும் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான மாற்றங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் தளத்தை நிர்வாகம் செய்யும் மெட்டா செப்டம்பர் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 63.1 பில்லியன் டாலர் அளவிலான விளம்பர வருவாயைப் பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் கூகுளின் விளம்பர வருவாய் அளவை மெட்டா நெருங்கி வருவது மூலம் அதன் ஆதிக்கம் விரைவில் உடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உலகளவில் 2026ஆம் ஆண்டு இறுதியில் டிஜிட்டல் விளம்பர வருவாயில் கூகுளின் மகுடத்தை மெட்டா கைப்பற்றும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
கூகுளின் சர்ச் முறையில் கொண்டு வரப்பட்ட மாற்றம் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் அறிமுகம் காரணமாகக் கூகுளின் இழப்பு மெட்டாவுக்கு சாதகமாக மாறியுள்ளது.
ஏஐ மீதான முதலீடுகள் எந்த அளவுக்கு லாபத்தைக் கொடுக்கும் என்பது இதுவரையில் தெரியாமல் இருக்கும் வேளையில் கூகுள் தனது விளம்பர வருவாய் ஆதிக்கத்தை கட்டாயம் விட்டுக் கொடுக்காது என எதிர்பார்க்கப்படுவதால், ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தேவையான மாற்றங்களைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் தற்போது அதிகளவில் ஏஐ அடிப்படையிலான சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் காரணத்தால் ஜெமினி சாட்பாட், ஏஐ சம்மரி போன்றவற்றை அதிகம் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் ஒரு வெற்றி ஃபார்மூலாவாக இருந்த ஏஐ தற்போது ஆபத்தாக மாறியுள்ளது.
ஜெமினி சாட்பாட், ஏஐ சம்மரி ஆகியவற்றின் காரணமாக மக்கள் மற்ற இணையப் பக்கத்திற்குச் செல்வது அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் விளம்பரம் காட்டுவது மூலம் கிடைக்கும் வருமானம் கூகுளுக்கு குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications

