பொருளாதார மந்தநிலை காரணமாக கூகுள் நிறுவனம் ஒரு சில ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாக தகவல் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்தநிலையில் கூகுள் இந்தியாவுக்கான பொதுக்கொள்கை தலைவர் திடீரென தனது வேலையை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூகுள் இந்தியாவுக்கான பொதுக்கொள்கை தலைவர் அர்ச்சனா குலாட்டி தனது பதவியை கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஏற்ற நிலையில் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
கூகுள் இந்தியா
கூகுள் இந்தியாவுக்கான பொதுக்கொள்கை தலைவர் அர்ச்சனா குலாட்டி என்பவர் தனது வேலையை ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஏற்ற நிலையில் தற்போது திடீரென ராஜினாமா செய்துள்ளார். அர்ச்சனா குலாட்டி அவர்கள் ராஜினாமா செய்வதற்கான காரணங்கள் உடனே தெரியவில்லை. கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரும் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பிரதமர் மோடியின் குழுவில் அர்ச்சனா
பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டாட்சி சிந்தனை குழுவில் பணியாற்றிய அர்ச்சனா, அதன்பின்னர் கூகுள் நிறுவனத்தின் இந்திய பொதுக்கொள்கை தலைவராக கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பணியில் இணைந்தார். கூகுள் இந்தியாவின் ஒரு சில வழக்குகளை அவர் திறமையான முறையில் கையாண்ட நிலையில் திடீரென ராஜினாமா செய்திருப்பது கூகுள் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளம்
கூகுளின் வணிக நடத்தை மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஆகியவற்றின் பயன்பாட்டில் அவர் பணிபுரிந்த நிலையில் அவரது பணியும் திருப்திகரமாக இருந்ததாக கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக சில வழக்குகளில் அவர் சம்பந்தப்பட்டு வந்ததை அடுத்து அவர் ராஜினாமா செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கூகுளின் வளர்ச்சி
இந்தியாவில் கூகுளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய பொதுக்கொள்கை தலைவர் அர்ச்சனா, நிர்வாக குழுவினர்களை வழிநடத்தினார் என்றும் அவரது தலைமையில் கூகுள் இந்தியா சிறப்பாக இயங்கியது என்றும் கூறப்படுகிறது.
இந்திய அரசுப்பணி
பல ஆண்டுகளாக இந்திய அரசு பணியாளராக அர்ச்சனா குலாட்டி இருந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் கூட்டாட்சி சிந்தனை குழுவான நிதி ஆயோக் டிஜிட்டல் தகவல் தொடர்புக்கான இணைச் செயலாளராக பணியாற்றியவர் அர்ச்சனா என்பது குறிப்பிடத்தக்கது. 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடையே அவர் இந்தியாவின் முக்கிய அரசு பொறுப்புகளில் பணியாற்றினார் என்பதும் அவரது லிங்க்ட்-இன் சுய விவரம் தெரிவிக்கின்றது.
அடுத்தகட்ட திட்டம்
பிரதமர் மோடியின் மத்திய அரசின் கீழ் தனியுரிமை கட்டுப்பாடு மற்றும் சட்ட ஆய்வு போன்றவற்றை சரியாக வழிநடத்திய அர்ச்சனா, கூகுள் நிறுவனத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் அவர் திடீரென தற்போது கூகுளில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்ததாக அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications