கொசு எனும் சின்ன உயிரினம் தான் உலகளவில் பல லட்சம் மனிதர்களின் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது. கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்களை நாம் இழக்கிறோம். கொசுக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வழிகளைப் பற்றி பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொள்கின்றன. ஆனால் இந்த கொசுவை ஒன்னுமே செய்ய முடியவில்லை.
உலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகுள், கொசு ஒழிப்பு பணியில் இறங்கியுள்ளது. உலகம் முழுவதும் பல கொடிய நோய்களைப் பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் கூகுள் நிறுவனம் ஆய்வகத்தில் 3.2 கொசுக்களை உருவாக்கியுள்ளது. இந்த கொசுக்களை ஊருக்குள் விடும் திட்டத்திற்கு டீபக் (Debug) என பெயர் சூட்டியுள்ளது. இதனைச் செயல்படுத்த பெரும் நிதியைச் செலவிட கூகுள் நிறுவனம் தயாராக இருக்கிறது. இதற்காக அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பமும் செய்துள்ளது.

கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழிமுறைகளைக் கண்டறியும் டீபக் திட்டத்தை கடந்த 2014 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் தொடங்கியது. உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், அரசு முகமைகளுடன் இணைந்து டீபக் ஆராய்ச்சி நிறுவனம் பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஆண் கொசுக்களுக்கு வோல்பாகியா பிபியெண்டிஸ் (Wolbachia pipientis) எனும் பாக்டீரியாவை செலுத்தப்படும்.
இந்த பாக்டீரியா கொண்ட ஆண் கொசுக்கள், பெண் கொசுவுடன் இனச்சேர்க்கை கொள்ளும்போது, முட்டைகள் உருவாகும், ஆனால் அது பொரிப்படைந்து புது கொசுக்கள் பிறக்காது. இதனால் காலப்போக்கில் கொசுக்களின் எண்ணிக்கை குறையும் என்கிறது கூகுள்.
முதல்கட்டமாக இந்த திட்டத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மற்றும் ஃபுளோரிடா மாகாணத்தில் கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் செயல்படுத்த அமெரிக்க அரசிடம் அனுமதி கோரி கூகுள் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. முதல்கட்டமாக இந்தாண்டு 1.6 கோடி கொசுக்களையும், அடுத்தாண்டு 1.6 கோடி கொசுக்களையும் விடுவிக்க அனுமதி கேட்டிருகிகிறதாம்.
இவ்வாறு பொதுவெளியில் விடப்படும் கொசுக்களின் செயல்பாடுகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு. பின்னர், படிப்படியாக பல்வேறு பகுதிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுப்படுத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை அனுமதி தந்துவிட்டால் கூகுள் நிறுவனம் இதனை செயல் படுத்த தொடங்கும்.
ஆனால் அமெரிக்க அரசாங்கம் இந்த திட்டத்திற்கு அத்தனை எளிதாக அனுமதி தந்துவிடாது. ஜூன் 5ஆம் தேதி வரை மக்கள் இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் கூகுள் இதனையே ஒரு தொழிலாக மாற்றி லாபம் பார்க்கவும் வாய்ப்புள்ளது. பல்வேறு நாடுகளிலும் கொசு மற்றும் அதனால் பரவும் நோய்கள் பெரிய பிரச்சினையாக இருப்பதால் தொழில்நுட்ப் அடிப்படையில் தீர்வு தரும் தயாரிப்பாக இதனை விற்க வாய்ப்புள்ளது.
இதனால் தங்கள் பகுதியில் கொசு தொல்லை அதிகரிக்கும் என பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறதாம். ஆனால் இவை அனைத்தும் ஆண் கொசுக்கள் என்பதால் கொசு கடி பிரச்சினை இருக்காது காலபோக்கில் புது கொசுக்கள் உருவாகாமல் மக்கள் நிம்மதியாக இருக்கலாம் என்கிறது கூகுள். இந்த திட்டத்திற்காக 10 ஆண்டுகளாக கூகுள் பல கோடியை செலவு செய்துள்ளது எனவே எப்படியாக இதனை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருகிறது.


Click it and Unblock the Notifications

