ஜி20 கூட்டத்தில் அழைப்புகளில் மத்திய அரசு இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என குறிப்பிட்டது பெரும் விவாத பொருளாக மாறிய நிலையில், பல இடங்களில் பாரத் என அரசு தரப்பிலும், மத்திய அமைச்சர்களும் பயன்படுத்தினர். இந்த நிலையில் கூகுள் நிறுவனம் முக்கியமான மாற்றத்தை தனது சேவைகளில் கொண்டு வந்துள்ளது.
கூகுள் தனது சமீபத்திய சர்ச் அல்காரிதம் அப்டேட் செய்யப்பட்டதில் இருந்து இந்தியா, பாரத் ஆகிய இருந்து செல்லுக்கும் தென்னாசிய நாடாக ஏற்றுக்கொள்ளும் மாற்றத்தை செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்த மாற்றத்தை கூகுள் தனது பிற முக்கிய சேவைகளான கூகுள் மேப்ஸ், கூகுள் சர்ச், கூகுள் டிரான்ஸ்லேட்டர், கூகுள் நியூஸ் ஆகியவற்றிலும் கொண்டு வந்துள்ளது.

உதாரணமாக நீங்க இப்போது கூகுள் சர்ச்-க்கு சென்று பாரத் என டைப் செய்தால் இந்திய கொடியுடன் இந்தியா ஒரு தென்னாசிய நாடு என்றும், இந்தியா குறித்த விபரத்தையும் காட்டுகிறது. முன்பு பாரத் என டைப் செய்தால் பாரத் தொடர்பான செய்திகளையும், அதை சார்ந்த விஷயங்களை மட்டுமே காட்டும். இப்புதிய அப்டேட் மூலம் பாரத் என டைப் செய்தால் இந்தியா என காட்டுகிறது.
இதேபோல் கூகுள் மேப்ஸ் சேவையில் பாரத் என டைப் செய்தால் இந்தியா மேப்-ஐ காட்டுகிறது. மேலும் கூகுள் நியூஸ் தளத்திலும் பாரத் என டைப் செய்து சர்ச் செய்தால் இந்தியா என்பதற்கான விபரங்களை காட்டுகிறது. இதன் மூலம் கூகுள் சேவை தளம் அனைத்தும் இந்தியா - பாரத் இரண்டும் ஒன்றாக கணக்கில் ஏற்றுக்கொண்டது.
மத்திய அரசு மெல்ல மெல்ல தனது அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் பார்த் என்ற சொல்லை புகுத்த துவங்கிய நிலையில் கூகுள் செய்துள்ள மாற்றம் சர்வதேச அளவில் மக்களின் பயன்பாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும். இதேபோல் ஹிந்தி மொழியில் इंडिया என்ற சொல்லுக்கு இணையாக भारत என்பதை ஏற்க துவங்கியுள்ளது. இதேபோல் ஹிந்தியில் இந்தியாவுக்கு இணையான சொல்லாக ஹிந்துஸ்தான், இந்தியாவர்ஷ் ஆகிய சொற்கள் காட்ட துவங்கியுள்ளது கூகுள்.

கடந்த வாரம் மத்திய ரயில்வே அமைச்சகம் மத்திய அமைச்சகத்தை அதன் அறிக்கைகளில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்பதை பயன்படுத்த கோரிக்கை விடுத்தது. இதேபோல் தேசிய கல்வி அமைப்பான NCERT அமைப்பு அனைத்து பாட புத்தகத்திலும் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என பயன்படுத்த பரிந்துரை செய்தது. ஆனால் இதற்கான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications