ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், அதன் பயன்பாட்டு அளவு ஒரு சிறிய வட்டத்திற்குள் முடங்கிவிடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேவேளையில் ஏஐ மிகவும் செலவு மிக்க ஒரு தொழில்நுட்பமாக இருப்பதால் ஒவ்வொரு ஏஐ நிறுவனமும் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான புதிய வழிகளை உருவாக்கி வருகிறது.
அந்த வகையில் 1.4 பில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட சாட்ஜிபிடி தளத்தை உருவாக்கிய ஒப்பன்ஏஐ தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை அளிக்கும் விதமாகவும், உலகம் முழுவதும் இருக்கும் வர்த்தகங்களுக்கும் - வாடிக்கையாளர்களுக்குமான பாலமாக இருக்க வேண்டும் என Business Hub என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இப்புதிய சேவை மூலம் ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய வர்த்தகத்தையும், சேவைகளையும் சாட்ஜிபிடி தளத்தில் பிஸ்னஸ் ப்ரொபைல் ஆக இணைக்க முடியும்.
தற்போது இச்சேவை பீட்டா அளவில் இருக்கும் நிலையில், விரைவில் உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாட்ஜிபிடி தளத்தைப் பயன்படுத்தும் 1.4 பில்லியன் வாடிக்கையாளர்கள் பொருட்களைத் தேடவோ, ஒப்பீடு செய்து பார்க்கும் நபர்களுக்கு, அப்பொருட்களை வாங்கத் திட்டமிடுவோருக்கு இந்த பிஸ்னஸ் ப்ரொபைல் மூலம் கூடுதல் Attention உருவாக்க உதவுகிறது.
இது கூகுள் நிறுவனத்தின் டிஸ்கவரி சேவைக்கு இணையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுமட்டும் அல்லாமல் பிஸ்னஸ் ப்ரொபைல் உருவாக்கும் நிறுவனங்களுக்குத் தனது வாடிக்கையாளர்களுடன் 24X7 உரையாட, சந்தேகங்களுக்கான விளக்கம் கொடுக்க ஏஐ ஏஜெண்ட் உருவாக்கும் வசதியையும் சாட்ஜிபிடி அளிக்கிறது.
இதேபோல் இந்த சேவை மூலம் எவ்வளவு வாடிக்கையாளர் ஈர்க்கப்பட்டு, வருமானம் ஈடுபட்டு உள்ளது என்பதை டிராக் செய்யவும் தனி தளம் உருவாக்கி வருகிறது ஓப்பன்ஏஐ. இது கிட்டத்தட்டக் கூகுள் பிஸ்னஸ் ப்ரொபைல் மற்றும் கூகுள் சர்ச் கன்சோல் சேவை போலவே உள்ளது.
மேலும் ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கும் பிஸ்னஸ் ஓனர்களுக்கு தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தனிப்பட்ட ஏஐ ஏஐெண்ட் சேவை மிகவும் ஈர்க்கக் கூடிய விஷயமாக உள்ளது. இத்திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் வர்த்தகத்திற்கான தனி வெப்சைட், அதை டார்கெட் செய்ய சர்ச் இன்ஜின் போன்ற கட்டமைப்பு உடையும் என கணிக்கப்படுகிறது.
கூகுள் சேவையில் ஒரு நிறுவனத்தின் பிஸ்னஸ் ப்ரொபைல்-ஐ கூகுள் சர்ச் மற்றும் கூகுள் மேப்ஸ் உடன் இணைக்கிறது. ஆனால் ஓப்பன்ஏஐ டிஜிட்டல் வர்த்தகத்தை முதன்மையாகக் கருதும் நிறுவனங்கள், ஆன்லைன் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

உதாரணமாக, நீங்கள் கார் வாங்க விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம், உங்களுக்கு பிடித்தமான இரண்டு கார் குறித்து இறுதி முடிவுக்கு எடுக்க முடியாமல் தவிக்கும் போது. சாட்ஜிபிடி தளம் பல்வேறு காரணிகள், சூழ்நிலைகள் கொடுத்து ஆய்வு செய்ய ப்ராம்ட் கொடுத்தால் இண்டர்நெட் அனைத்தையும் தேடி அலசி உங்களுக்கான தீர்வு கொடுக்கும்.
அப்படிக் கொடுக்கப்பட்ட இறுதி தேர்வில், அந்த காரை வாங்குவதற்கும், அருகில் இருக்கும் டீலர்கள் உடன் இணைப்பதற்கும், டெஸ்ட் டிரைவ் புக் செய்வதற்கும், அந்த கார் குறித்த கேள்விகளைக் கேட்பதற்கும், சாட்ஜிபிடி தளத்திலேயே வசதிகள் இருந்தால் எப்படி இருக்கும். இதுதான் பிஸ்னஸ் ஹப்.


Click it and Unblock the Notifications
