OpenAI நிறுவனத்தின் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தளம் மிகவும் குறுகிய காலகட்டத்தில் உலகம் முழுவதும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற தாக்கத்தையும், பிம்பத்தையும் உருவாக்கியுள்ளது.
OpenAI நிறுவனம் வேகமாக வளரவும், அதன் வளர்ச்சி பாதையை அமைத்ததில் எலான் மஸ்க்-கிற்கு முக்கியப் பங்கு உள்ளது, ஆனால் செயற்கை நுண்ணறிவு மூலம் ஏற்படும் பாதிப்பை முன்கூட்டியே உணர்ந்து இதில் இருந்து OpenAI நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் OpenAI நிறுவனத்தின் ChatGPT, கூகுள்-ன் எதிர்காலத்தை முடிக்கப்போகிறது என்று பேச்சு அடிப்பட்டு வரும் நேரத்திலேயே நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்-டா என்ற வகையில் கூகுள் புதிய செயற்கை நுண்ணறிவு சேட்பாட் தளமான Bard-ஐ உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.
chatGPT புகழ்
chatGPT ஐ அழிக்கக் கூகுள் தயாராகி உள்ளது, கூகுள் ஏற்கனவே Google I/O 2021 கூட்டத்தில் அறிமுகம் செய்த LaMDA (Language Model for Dialogue Applications) தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்கும் chatbot-ஐ அறிமுகம் செய்தது. இக்கூட்டத்தில் பயன்படுத்திய பலரை வியக்க வைத்தாலும், பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்படவில்லை.
கூகுள் Bard
இந்த நிலையில் பாலியல், இனவெறி, மதவெறி மற்றும் பிற மோசமான மனித சார்புகளை அகற்ற AI மாதிரிக்கு இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை என்ற காரணத்தால் மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யாமல் இருந்தது. இந்த நிலையில் chatGPT ஆதிக்கம் செலுத்தும் முன் கூகுள் தனது பார்ட் (BARD) என்ற AI chatbot-ஐ அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் எப்படி..?
இந்த நிலையில் கூகுள் எப்படி chatGPT ஐ வெல்ல முடியும் என்று தானே கேட்குறீங்க, செயற்கை நுண்ணறிவு பிரிவில் கூகுள் உலகின் மிகவும் மேம்பட்ட AI நிறுவனமாகும். நீங்கள் google IO நிகழ்ச்சியைக் கவனித்தால் இது புரியும், ஏறக்குறைய 10 வருடங்களாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் AI இல் தொடங்கி AI இல் முடிவடைகிறது.
AI தொழில்நுட்பம்
AI தொழில்நுட்பத்தில் நீண்ட காலம் பணியாற்றி வருவதால் கூகுள்-ஐ யாரும் தோற்கடிக்க முடியாது என்று அர்த்தமல்ல. ஆனாலும், கூகுள் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது, இதற்கான காரணத்தைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
கூகுள்-ன் சக்திவாய்ந்த crawler
இன்று மக்களுக்கு இண்டர்நெட் என்றாலே, அதன் ஆரம்பம் கூகுள் தான். உலகில் எந்தச் சர்ச் இன்ஜினிலும் இல்லாத வகையில் கூகுள் மிகவும் சக்திவாய்ந்த crawler-ஐ கொண்டுள்ளது. இந்த வெப் க்ராலர் மூலம் இண்டர்நெட்-ல் உள்ள ஒவ்வொரு புதிய பதிவுகள், தகவல்களை நாள் அடிப்படையில் அட்டவணை போட்டு வைத்துள்ளது.
தகவல் பற்றாக்குறை
ஆனால் இன்று உலகமே கொண்டாடும் சூப்பர் பவர் chatGPT-யிடம் 2021 வரை மட்டுமே தகவல் உள்ளது அதாவது, சமீபத்தில் நடந்த விஷயங்கள் பற்றித் தெரியாது உதாரணமாக iPhone 13 அல்லது சமீபத்திய சீனா கோவிட் தொற்று போன்ற விஷயங்கள் தெரியாது. இது AI chatbot தேடலில் பெரிய தடை.
தவறான தகவல்
இதனால் chatGPT AI chatbotல் வரும் பதில்களில் பலவற்றுக்குத் தகவல்கள் பொருத்தமானதாகவோ அல்லது புதுப்பித்ததாகவோ இருக்காது. இந்தப் பிரச்சனையை chatGPT தளத்தில் பலரும் எதிர்கொண்டு உள்ளனர்.
தகவலுக்கு பஞ்சமில்லை
ஆனால் கூகுள் அப்படியில்லை, பழைய தகவல்களை வைத்திருப்பது மட்டும் அல்லாமல் புதிய தகவல்களை ரியல் டைம் அளவில் இன்டெக்ஸ் செய்து தனது crawler-ல் மிகவும் சிறப்பான முறையில் காட்டி வருகிறது. இது AI தேடலில் கூகுள்-ஐ மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றும்.
கூகுள் அசிஸ்டண்ட் - AI Lamda தொழில்நுட்பம்
கூகுள் அசிஸ்டண்ட் (ஓகே கூகுள்)க்கு பயன்படுத்தும் அதே AI - Lamda தொழில்நுட்பத்தைத் தனது புதிய AI chatbot பார்ட் (BARD) பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களால் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
விலை - விளம்பரம்
மற்றொரு பெரிய நன்மை விலை, கூகுள் ஒரு விளம்பர நிறுவனம் என்பதால், கூகுள் தனது தயாரிப்புகளை மக்கள் இலவசமாகப் பயன்படுத்தி அதன் மூலம் விளம்பரங்கள் வாயிலாகப் பணம் சம்பாதிக்கக் கூடிய திறன் உள்ளது.
Bard - இலவசம்
இதனால் கூகுள் Bard தளத்தை மக்களுக்கு இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்கலாம். இலவசம் என்றால் கேட்கவே வேண்டாம் காட்டுத்தீ போலப் பரவும். ஆனால் chatGPT இப்போதே ஒரு மாதத்திற்கு 20 டாலர் என்ற கட்டணத்தை விதிக்கிறது.
chatGPT Vs Bard
இப்போ சொல்லுங்க யார் யாரை முடிப்பது. கூகுள் Bard தளத்தில் அதிகப்படியான தகவல், சிறப்பான crawler, கட்டணமில்லா சேவைக்கு வாய்ப்பு, பல கோடி மக்கள் பயன்படுத்தும் AI - Lamda தொழில்நுட்பத்தின் உதவி, அனைத்திற்கும் மேலாகக் கூகுள் மீதான நம்பிக்கை.
மைக்ரோசாப்ட் - கூகுள்
மைக்ரோசாப்ட் - கூகுள் மத்தியில் இருக்கும் போட்டியில், கூகுள் ஆதிக்கத்தை உடைக்கப் பல முறை முயற்சி செய்தும் முடியாமலே போன மைக்ரோசாப்ட்-க்கு முக்கிய வாய்ப்பாக அமைந்தது chatGPT. இதற்காகக் கூகுள் சர்ச் இன்ஜின் ஆதிக்கத்தைக் குறைக்க மைக்ரோசாப்ட் 10 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்தது.
மைக்ரோசாப்ட்-க்கு கூகுள் பதிலடி
ஆனால் கூகுள் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் குறுகிய காலத்தில் மைக்ரோசாப்ட்-க்கு கூகுள் பதிலடி கொடுத்தது இல்லை. இதுவரை அவ்வளவு வேகமான பதிலடியைக் கூகுள் தரப்பில் யாருமே பார்த்து இல்லை.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications