2 முக்கிய சேவைகளை மூடும் கூகுள்.. என்ன காரணம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமாக இருக்கும் கூகுள் சில முக்கியச் சேவைகளை மக்களின் பயன்பாட்டில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

2022 ஆம் ஆண்டு டெக் நிறுவனங்களுக்கு மிகவும் மோசமான காலகட்டமாக மாறியுள்ளது, செப்டம்பர் காலாண்டில் முன்னணி நிறுவனங்களும் மோசமான நிலையை எதிர்கொண்டது. இதன் வாயிலாக எதிர்வரும் ரெசிஷனை சமாளிக்கச் செலவுகளைக் குறைக்க ஊழியர்கள் பணிநீக்கம் உட்படப் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் தமிழரான சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகுள் நிறுவனத்தின் 2 முக்கியச் சேவைகள் குறிப்பிட்ட காரணத்திற்காக ரத்து செய்யப்பட உள்ளது.

சுந்தர் பிச்சையின் சொந்த ஊரிலேயே சொதப்பும் கூகுள் மேப்.. ட்விட்டரால் பரபரப்புசுந்தர் பிச்சையின் சொந்த ஊரிலேயே சொதப்பும் கூகுள் மேப்.. ட்விட்டரால் பரபரப்பு

கூகுள் ஸ்ட்ரீட் வியூவ்

கூகுள் ஸ்ட்ரீட் வியூவ்

கூகுள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருகிற மார்ச் 2023 ல் ஆண்டுராய்டு தளத்தில் இயங்கும் ஸ்ட்ரீட் வியூவ் செயலிக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனியாக ஸ்ட்ரீட் வியூவ் ஆப்-ஐ ஆண்டுராய்ட் மற்றும் ஐஓஎஸ்-க்குத் தளத்தில் அளித்து வருகிறது.

கூகுள் மேப்-ல் ஸ்ட்ரீட் வியூவ் சேவை

கூகுள் மேப்-ல் ஸ்ட்ரீட் வியூவ் சேவை

இதை வைத்து கூகுள் மேப்-ல் ஸ்ட்ரீட் வியூவ் சேவை பெறலாம். தற்போது கூகுள் மேப்ஸ்-லேயே ஸ்ட்ரீட் வியூவ் ஸ்டூடியோ வெப் ஆப் மூலம் 360 imagery சேவையைப் பெற முடியும் என்பதால் தனியாக ஸ்ட்ரீட் வியூவ் செயலி தேவையில்லை.

6 வருடம்
 

6 வருடம்

கூகுள் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், புனே, நாசிக், வதோதரா, அகமதுநகர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய பகுதிகளில் ஸ்ட்ரீட் வியூவ் சேவையை அளிக்கிறது, 2016ல் ஸ்ட்ரீட் வியூவ் தடை செய்யப்பட்ட பின்பு 6 வருடத்திற்குப் பின்பு ஸ்ட்ரீட் வியூவ் சேவை வந்துள்ளது. தற்போது கூகுள் மேப்ஸ் தளத்திலேயே பல புதிய சேவைகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Google Hangouts நீக்கம்

Google Hangouts நீக்கம்

இதேபோல் கூகுள் நிறுவனத்தின் டெக்ஸ்ட், வீடியோ, வாய்ஸ்சாட் செயலியான Google Hangouts-ஐ நீக்கிவிட்டு, அதை Google Chat ஆக மேம்படுத்த உள்ளது கூகுள். கூகுள் நிறுவனத்தின் முக்கியச் சேவையாக விளங்கும் ஜிமெயில் சேவையில் Google Hangouts இணைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர். இது செவ்வாய்க்கிழமை உடன் நிறுத்தப்பட்டு உள்ளது.

 கூகுள் சாட்

கூகுள் சாட்

Google Hangouts செயலியும் சேவையும் செவ்வாய்க்கிழமை முதல் ஆண்டுராய்ட் மற்றும் ஐஓஎஸ்-க்குத் தளத்தில் நீக்கப்பட்ட நிலையில், இதன் இடத்தைக் கூகுள் சாட் நிரப்புகிறது.

புதிய சேவைகள்

புதிய சேவைகள்

கூகுள் சாட்-ல் இன்றைய இளைய தலைமுறையினர் பயன்படுத்தும் அனைத்து சேவைகளும் உள்ளது, இதில் டெக்ஸ்ட், வீடியோ, வாய்ஸ்சாட் மட்டும் அல்லாமல் கூகுள் டாக்ஸ், ஸ்லைட்ஸ், ஷீட் ஆகியவற்றையும் பயன்படுத்தும் புதிய சேவையும் கொண்டு வரப்பட்டு உள்ளது.

ஆல்பபெட் காலாண்டு முடிவு

ஆல்பபெட் காலாண்டு முடிவு

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட், வெளியிட்டுள்ள செப்டம்பர் காலாண்டு முடிவில் லாபமாக 13.9 பில்லியன் டாலரை பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் 27% குறைவாகும்.

வருவாய்

வருவாய்

இதேகாலகட்டத்தில் ஆல்பபெட் நிறுவனத்தின் வருவாய் 6 சதவீதம் உயர்ந்து 69.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஆல்பபெட் நிறுவனத்தின் விளம்பர விற்பனை அளவு 4 சதவீதம் உயர்ந்து 39.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

16 செயலிகள் தடை

16 செயலிகள் தடை

கூகுள் நிறுவனம் சமீபத்தில் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சுமார் 16 செயலிகளை அதிகப்படியான பேட்டரி திறனை விழுங்கும் காரணத்திற்காகவும், அதிகப்படியாக இண்டர்நெட் டேட்டா-வை உட்கொள்ளும் காரணமாகவும்,பல்வேறு விளம்பர மோசடி செய்வதாகவும் கூறி சுமார் 16 ஆண்ட்ராய்டு செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

16 செயலிகள் நீக்கம்

16 செயலிகள் நீக்கம்

தற்போது தடை செய்யப்பட்டு உள்ள 16 செயலிகளின் பட்டியல் High-Speed Camera, Smart Task Manager, Flashlight+, memocalendar, 8K-Dictionary, BusanBus, Flashlight+, Quick Note, Currency Converter, Joycode, EzDica, Instagram Profile Downloader, Ez Notes, flashlite, calcul, Flashlight+ ஆகியவை உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: google கூகுள்
English summary

Google shuts down Hangouts; Google shutting down its dedicated Street View app 2023 March 31

Google shuts down Hangouts; Google shutting down its dedicated Street View app 2023 March 31
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X