உலகளவில் உருவாகியிருக்கும் ரெசிஷன் அச்சம், மந்தமான பொருளாதாரச் சூழ்நிலை ஆகியவற்றைச் சமாளிக்கக் கூகுள், பிற முன்னணி டெக் நிறுவனங்களைப் போலப் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன் வாயிலாக 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிர்வாகம் தற்போது புதிய ஊழியர்களை அதிகளவில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் சேர்க்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதால் இந்திய டெக் ஊழியர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த அனைத்து டெக் நிறுவனங்களும் தற்போது புதிய ஊழியர்களைச் சேர்க்கும் பணியில் இறங்கியுள்ளது. அது ஏன் தெரியுமா..?
கூகுள்
கூகுள் நிர்வாகம் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதை நிறைவு செய்த நிலையில் சுந்தர் பிச்சை ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனிப்பட்ட வகையில் ஈமெயில் அனுப்பி வருகிறார். அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குக் கடிதம் அனுப்பிய நிலையில் விரைவில் பிற நாட்டு ஊழியர்களுக்கு அனுப்ப உள்ளது கூகுள் நிர்வாகம்.
12000 ஊழியர்கள்
இந்தியாவில் மட்டும் இந்த 12000 ஊழியர்கள் பணிநீக்கத்தில் சுமார் 450 பேர் தங்களது வேலையை இழந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் கூகுள் இந்தியாவில் புதிய ஊழியர்களைச் சேர்ப்பதற்காகப் பல வேலைவாய்ப்பு பதிவுகளைத் தனது லின்கிடுஇன் கணக்கில் பதிவிட்டு உள்ளது.
முக்கியப் பணிகள்
கூகுள் தற்போது மேனேஜர், ஸ்டார்ட்அப் சக்சஸ் டீம், Employee Relations Partner, Startup Success Manager, Google Cloud, Vendor Solutions Consultant, Google Cloud, Product Manager, Database Insights, எனப் பல பதவிகளில் புதிய ஊழியர்களைத் தேடி வருவதாக அறிவித்துள்ளது. இந்த வேவைவாய்ப்புகள் ஹைதராபாத், பெங்களூர், குருகிராம் ஆகிய அலுவலகத்தில் உள்ளது.
டிஜிட்டல் சேவை புரட்சி
கடந்த 3 வருடத்தில் டிஜிட்டல் சேவையில் ஏற்பட்ட புரட்சி மூலம் அளவுக்கு அதிகமான ஊழியர்களைச் சேர்த்த நிலையில் தான் அதிகப்படியான ஊழியர்களைச் சேர்த்தது. இந்த நிலையில் ரெசிஷன் பாதிப்புக் காரணமாகத் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கி வெளியேற்றப்பட்டது.
இளம் தலைமுறையினர்
இந்த நிலையில் தற்போது தேவையான இடத்தில் முக்கியமான பணிகளில் பணியாற்ற ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இது மட்டும் அல்லாமல் இளம் தலைமுறையினரை பணியில் சேர்க்கப்பட உள்ளனர்.
ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகள்
இதற்காக உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவின் முக்கியக் கல்லூரிகளான ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகளில் இருந்தும் மாணவர்களைத் தேர்வு செய்து வருகிறது.
சூசன் வோஜ்சிக்கி
2014 முதல் யூடியூப் சிஇஓ ஆக இருந்த சூசன் வோஜ்சிக்கி 25 வருடமாகக் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, புதிய பாதையைத் தேர்வு செய்யப் பொறுப்புகளை விட்டு வெளியேறுவதாகச் சூசன் வோஜ்சிக்கி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
நீல் மோகன்
2015ல் யூடியூப்-ன் CPO நியமிக்கப்பட்ட நீல் மோகன் தற்போது யூடியூப் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார். நீல் மோகன் 2015 முதல் பல முக்கியமான திட்டத்தில் பணியாற்றி இருந்தாலும் யூடியூப் ஷாட்ஸ் மற்றும் யூடியூப் மியூசிங், பல சப்ஸ்கிரிப்ஷன் மாடல்களை உருவாக்கியதில் முக்கிய இடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications