சுந்தர் பிச்சை. உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். தனது வாழ்க்கைப் பயணம் பற்றி அண்மையில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்த வேலையில் சேராமல் போயிருந்தால் தனது வாழ்க்கைப் பயணம் வேறுவிதமாக திசை திரும்பியிருக்கும் என்கிறார் சுந்தர் பிச்சை.

தமிழ்நாட்டின் கோயில் நகரமான மதுரையில் 1970 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதியன்று சுந்தர் பிச்சை பிறந்தார். அவரது தந்தை ரகுநாத பிச்சை ஜிஇசி நிறுவனத்தில் எலக்ட்ரிகல் இன்ஜினியராக வேலை பார்த்தார். தாயார் லட்சுமி ஒரு ஸ்டெனோகிராபர்.
சென்னையில் உள்ள ஜவாஹர் வித்யாலயா சீனியர் செகண்டரி ஸ்கூலில் மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்தார். பிளஸ் டூவை ஐஐடி சென்னையில் உள்ள வனவாணி ஸ்கூலில் படித்தார். ஐஐடி கரக்பூரில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார்.
சுந்தர் பிச்சை பிஎச்டி படிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் விரும்பினர். ஆனால் சுந்தர் பிச்சைக்கு பிஎச்டி படிப்பதை விட தனது கிடைக்கும் வேலையில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதை உணர்ந்தார். இதனால் வேலைக்குச் சேர்ந்து விட்டார்.
தனது பெற்றோர் விருப்பப்படி பிஎச்டி படித்திருந்தால் இப்போது உள்ளபடி பலருக்கு தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டு செல்ல முடியாதபடி போயிருக்கும். இந்தியாவில் நடைமுறை அனுபவத்தைவிட கல்விக்குத்தான் முன்னுரிமை தரப்படுகிறது.
இந்திய மாணவர்களிடம் சிறந்த திறமையும், நல்ல திறனும் உள்ளது. என்னைப் பொறுத்தவரை, பாரம்பரிய கல்வி சாதனைகளை விட நிஜ உலக அனுபவமும் படைப்பாற்றலும் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாகும் என்று சுந்தர் பிச்சை கூறுகிறார்.
2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்துக்குச் செல்வதற்கு முன்பு மெட்டீரியல் இன்ஜினியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் குரோம், ஜிமெயில் மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற தயாரிப்புகளின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தார்.
2015 வாக்கில், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டை வழிநடத்தினார். லேரி பேஜுக்குப் பிறகு அவர் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனார். இன்று, ஆல்பாபெட்டின் சந்தை மதிப்பீடு ரூ. 138 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
2022ல் சுந்தர் பிச்சையின் சம்பளம் 226 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ. 1,854 கோடி) ஆகும். அதாவது அவர் ஒரு நாளைக்கு ரூ. 5 கோடி சம்பாதித்தார். இன்றைக்கும் கூகுள் முன்னெடுக்கும் பல்வேறு புதிய முயற்சிகளை சுந்தர் பிச்சைதான் முக்கியமாக கொண்டு செல்கிறார்.
Story written by: I. Jayachandran
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications