கூகுள் சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு உதவும் 40 சிஇஓ-க்கள் கொண்ட குளோபல் டாக்ஸ் போர்ஸ்-ல் இணைந்தார்..!

ஆசியாவின் மிக முக்கியப் பொருளாதார நாடாக விளங்கும் இந்தியா கொரோனா 2வது அலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்தியாவிற்கு 40க்கும் அதிகமான நாடுகள் உதவி வரும் வேளையில் அமெரிக்காவின் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பின் தலைமையில் 40 நிறுவனங்களின் சிஇஓ-க்கள் இணைந்து குளோபல் டாஸ்க் போர்ஸ் குழு சில வாரங்களுக்கு முன் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவிற்கு உதவும் இக்குழுவில் தற்போது அமெரிக்காவின் மிக்பெரிய இண்டர்நெட் நிறுவனமான கூகுள்-ன் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை மற்றும் அடோபி நிறுவனத்தின் சிஇஓ-வான சாந்தனு நாராயன் ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர்.

இந்தியாவிற்கு உதவ வேண்டும் என்பதற்காக அமெரிக்கக் கார்பரேட் நிறுவனங்களின் மிக முக்கியமான முயற்சி தான் இந்தக் குளோபல் டாஸ்க் போர்ஸ் குழு.

அமெரிக்காவின் சேம்பர் ஆப் காமர்ஸ்

அமெரிக்காவின் சேம்பர் ஆப் காமர்ஸ்

இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அமெரிக்க அரசிடம் பூட்டிவைக்கப்பட்டு இருக்கும் வேக்சினை இந்தியாவிற்கு விரைவில் கொடுக்க முதல் முறையாகக் கோரிக்கையை வைத்தது அமெரிக்காவின் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பு தான்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இதேபோல் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதுமான ஆக்சிஜன் அளிக்க முடியாத நிலையில் இந்திய மக்களும், இந்திய அரசும் தவித்து வந்த நிலையில் அமெரிக்காவின் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் இதர சில அமைப்பு இணைந்து 40 அமெரிக்க நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் ஒன்றுசேர்ந்து ஒரு குழுவை உருவாக்கினர்.

இந்தியாவின் தேவைகள்

இந்தியாவின் தேவைகள்

இக்குழு இந்தியாவிற்குத் தேவையான ஆக்சிஜன், வேக்சின் , வேக்சின் தயாரிப்பதற்கான மூலப்பொருள், நிதிப் பற்றாக்குறை எனப் பல பிரச்சனைகள் தீர்க்கவும் தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்ய public-private partnership முறையில் உருவாக்கப்பட்ட குழுவாக இது உள்ளது.

Deloitte புனித் ரெஞ்சன்

Deloitte புனித் ரெஞ்சன்

இக்குழுவில் தீவிரமாகப் பணியாற்றும் Deloitte நிறுவனத்தின் புனித் ரெஞ்சன் இந்தியாவில் 25,000க்கும் அதிகமான ஆக்சிஜென் கான்சென்டிரேட்டர்ஸ் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், முதல் 1000 ஆக்சிஜென் கான்சென்டிரேட்டர்ஸ் ஏப்ரல் 25ஆம் தேதி இந்தியாவிற்கு வந்தது.

45 அமெரிக்க நிறுவனங்கள்

45 அமெரிக்க நிறுவனங்கள்

இக்குழுவில் அக்சென்சர், அமேசான், ஆப்பிள், பாங்க் ஆப் அமெரிக்கா, பெட்எக்ஸ், ஐபிஎம், Deloitte, கூகுள், அடோபி, அமெரிக்கன் ரெட் கிராஸ், டிஹெச்எல், டோவ், ஜான்சன் அண்ட் ஜான்சன், மாஸ்டர்கார்டு, மெட்டிரானிக், மைக்ரோசாப்ட், பெப்சிகோ, யூபிஎஸ், விஎம்வேர், வால்மார்ட் என 45க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் இந்தியாவிற்காக உதவும் இந்தக் குளோபல் டாக்ஸ் போர்ஸ்-ல் இணைந்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+