உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் மத்தியில் தற்போது இருக்கும் முக்கியமான போட்டி செயற்கை நுண்ணறிவு துறையில் தான். வெப் சர்ச் முதல் விளம்பர வருவாய் வரையில் AI ஆதிக்கம் இருக்கும் காரணத்தால் இத்துறையில் போட்டிப்போடும் கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மத்தியிலான போட்டி சற்று கூடுதலாகவே இருக்கும் வேளையில், 2 இந்திய உயிர்களுக்காக ஆப்பிள், கூகுள் அடித்துக்கொள்கிறது என்பது தான் டெக் உலகில் முக்கிய விவாதமாக உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் AI துறையில் முன்னோடியாக இருக்கும் ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனத்தில் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்து தனக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப சேவைகளையும், தொழில்நுட்பத்தையும் OpenAI நிறுவனத்திடம் இருந்து பெற்று வருகிறது. ஆனால் கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அப்படியில்லை, அனைத்தையும் சொந்தமாக உருவாக்க வேண்டும். இதற்கு திறன்வாய்ந்த ஊழியர்கள் அவசியம்.

AI துறையில் முன்னோடியாக இருக்கும் 3 இன்ஜினியர்கள் தற்போது ஹாட் டிமாண்ட் ஆக உள்ளனர். ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இந்த 3 பேரையும் ஈர்ப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளது, இந்த மூவரும் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளனர், தற்போது கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
சீனிவாசன் வெங்கடாச்சாரி, ஸ்டீவன் பேக்கர் மற்றும் ஆனந்த் சுக்லா ஆகிய மூவரையும் சுந்தர் பிச்சை நேரடியாக தொடர்பு கொண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்த்துள்ளார். இதேவேளையில் டிம் குக் இந்த 3 பேரையும் தக்கவைக்க அனைத்து விதமான முயற்சிகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சுந்தர் பிச்சை கொடுத்த நம்பிக்கையையும் வாய்ப்பையும் நம்பி தற்போது கூகுள் நிறுவனத்தின் large-language models-ல் பணியாற்றி வருகின்றனர்.
இந்த 3 பேரில் சீனிவாசன் வெங்கடாச்சாரி, ஆனந்த் சுக்லா ஆகியோர் இந்தியர்கள், ஐஐடி கல்லூரி பட்டதாரிகள். இதில் சீனிவாசன் ஆப்பிள் நிறுவனத்தை விட்டு ஆக்டோபர் 2022ல் வெளியேறினார், ஆனந்த் நவம்பர் 2022ல் வெளியேறினார்.

சீனிவாசன் வெங்கடாச்சாரி, ஸ்டீவன் பேக்கர் மற்றும் ஆனந்த் சுக்லா ஆகிய மூவரையும் சுந்தர் பிச்சை நேரடியாக தொடர்பு கொண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்த்துள்ளார். இதேவேளையில் டிம் குக் இந்த 3 பேரையும் தக்கவைக்க அனைத்து விதமான முயற்சிகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சுந்தர் பிச்சை கொடுத்த நம்பிக்கையும் வாய்ப்பையும் நம்பி தற்போது கூகுள் நிறுவனத்தின் large-language models-ல் பணியாற்றி வருகின்றனர்.
இதேவேளையில் எலான் மஸ்க் துவங்க உள்ள புதிய AI ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் கிளை நிறுவனமான DeepMind நிறுவனத்தில் இரு மூத்த ஆராய்ச்சியாளர்களை தனது நிறுவனத்தில் பணியாற்ற ஈர்த்துள்ளார். இந்நிறுவனத்திற்கான செயல்பாடுகளை வேகப்படுத்த 10000 graphics processing units (GPUs) வாங்கியுள்ளார். இது AI மற்றும் high-end graphics செயல்களை செய்யக்கூடிய திறன் கொண்டவை.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications