அமெரிக்காவில் புதன்கிழமை வர்த்தகத்தில் சத்ய நாடெல்லா தலைமை வகிக்கும் மைக்ரோசாப்ட் ஏஐ சேவைகள், முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் அதன் பங்கு மதிப்பு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல் முறையாக 3 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தொட்டது.
இதில் சத்ய நாடெல்லா, பில் கேட்ஸ், ஸ்டீவ் பால்மர் ஆகியோர் கொண்டாடி வரும் வேளையில் மைக்ரோசாப்ட்-ன் சமீபத்திய முயற்சிகள் அனைத்திற்கும் போட்டியாகச் சுந்தர் பிச்சை புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளார்.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தான் உருவாக்கிய க்ரோம் (Chrome) பிரவுசரில் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தை இணைத்து புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இப்புதிய சேவையில் க்ரோமில் திறக்கப்படும் டேப்-களை நிர்வாகம் செய்யப் புதிய வசதி, தீம்ஸ், சொந்தமாக எழுதும் சேவைகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதன் மூலம் கடந்த சில மாதங்களாக மைக்ரோசாப்ட் தனது சேவைகளில் ஏஐ பயன்பாட்டை அதிகரித்தது மூலம் நடந்த மாற்றங்கள் அனைத்திற்கும் வேட்டு வைத்துள்ளார் சுந்தர் பிச்சை. ஆயிரம் இருந்தாலும் கூகுள் தனது ஏஐ கட்டமைப்பைச் சொந்தமாகத் தயாரித்து உள்ளது.
மைக்ரோசாப்ட் ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் முதலீடு செய்து அனைத்துச் சேவைகளுடன் இணைத்துள்ளது. இது ஒருவகையில் குறைபாடாகப் பார்க்கப்பட்டாலும் இரு நிறுவனங்களும் பெரிய அளவிலான நன்மை உண்டு. ஆனால் உண்மையான போட்டி மைக்டோசாப்ட் சத்ய நாடெல்லா, கூகுள் சுந்தர் பிச்சை மத்தியில் தான். யார் முதலில் ஏஐ ரேசில் வெற்றி பெறுவார்கள் என்பதே இப்போதையைப் போட்டி.
டெக் உலகில் எப்போதும் ஆப்பிள் - மைக்ரோசாப்ட் மத்தியில் தான் கடும் போட்டியிருக்கும், ஆனால் கடந்த சில ஆண்டுகளாகக் கூகுள் - மைக்ரோசாப்ட் மத்தியில் போட்டி அதிகரித்துள்ளது.
நீண்ட காலமாக வெப் பிரவுசர் வர்த்தகத்தில் மைக்ரோசாப்ட் வெற்றி அடைய முடியாமல் தவித்து வந்த வேளையில் OS வர்த்தகத்தில் மைக்ரோசாப்ட் போலவே, கூகுள் மொபைலுக்கான OS அறிமுகம் செய்து ஆட்டத்தைச் சூட்டை அதிகரித்து.
ஆனால் உண்மையான போட்டி இரு நிறுவனங்களும் இந்தியர்களான சுந்தர் பிச்சை, சத்ய நாடெல்லா ஆகியோரை தனது சிஇஓ-வாக நியமித்த போது தான் வெடித்தது. ஒவ்வொரு முறையும் இரு நிறுவனங்களும் சந்தையில் ஆதிக்கம் அடைவதற்கான வாய்ப்புகளைத் தேடி வருவதோடு, பல நேரத்தில் வாய்ப்புக் கிடைத்ததில் தள்ளிவிடவும் தயங்குவது இல்லை.
இப்படியிருக்கையில் Gen AI வந்த பின்பு கூகுள் - மைக்ரோசாப்ட் நாள் தவறாமல் போட்டிப்போட்டு வருகிறது, இதுமட்டும் அல்லாமல் கடந்த 25 வருடத்தில் கூகுள் எப்போதும் இல்லாத வரையில் பதிலடி கொடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications