உலகளாவிய தொழில்நுட்பத் துறையை புரட்டிப் போடும் ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுக்க, அமெரிக்க நீதித்துறை தயாராகி வருகிறது. அமெரிக்காவின் Antitrust துறையின் மூத்த வழக்கறிஞர் ஆல்பாபெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான கூகுளை, அதன் குரோம் பிரவுசர் வர்த்தகத்தை விற்பனை செய்யும்படி வலியுறுத்தும் சட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளது.
சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் கடந்த 2 வருடமாக அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக மோனோபோலி விஷயத்தில் பல பிரச்சனைகளையும், போட்டி நிறுவனங்களின் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டு வருகிறது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு இது பெரியதாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போதே வெடிக்க துவங்கியுள்ளது.

அமெரிக்க அரசின் Antitrust துறை சர்ச் இன்ஜின் துறையில் கூகுளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடரப்பட்டு வழக்கின் ஒரு பகுதியாக இந்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சர்ச் இன்ஜின் துறையில் கூகுளின் ஆதிக்கம் பல நிறுவனங்களின் போட்டிப்போடும் தன்மையை குறைக்கிறது. நுகர்வோருக்கு அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நீதித்துறை மற்றும் பல அமெரிக்க மாநில நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் கூகுளை குரோம் பிரவுசர் வர்த்தகத்தை விற்பனை செய்ய வற்புறுத்துவது என்பது தான் சரியானதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இது கூகுள் நிறுவனத்திற்கும் தொழில்நுட்பத் துறைக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
முன்பெல்லாம் அமெரிக்காவில் வெளிநாட்டு நிறுவனத்தின் சேவைக்கு தான் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்படும், ஆனால் தற்போது அமெரிக்க நிறுவனங்களுக்கு மத்தியிலேயே போட்டி அதிகரித்துள்ளதால் கூகுள்-க்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக மைக்ரோசாப்ட் சர்ச் இன்ஜின் துறையில் நீண்ட காலமாக தனக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறது. ஆனால் கூகுள் பல தளத்தில், பல நிறுவனங்களுடன் செய்துள்ள மீற முடியாத ஒப்பந்தம் காரணமாக தற்போது மைக்ரோசாப்ட் இத்துறையில் நுழைய முடியாத அளவுக்கு கூகுள் ஆதிக்கம் செலுத்துகிறது.
குரோம் உலகின் மிகவும் பிரபலமான பிரவுசராக இருக்கும் காரணத்தால் அமெரிக்காவில் மட்டும் சுமார் 61% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. இந்த கூகுள் கிரோம் தான் கூகுளின் விளம்பர வர்த்தகத்திற்கு முக்கியமானது.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications