உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமாக இருக்கும் கூகுள் சமீபத்தில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்தியிலும் தயாரிப்பிலும் அதிகப்படியான ஆர்வம் காரணம் காட்டி வரும் வேளையில் மக்கள் மத்தியிலும் கூகுள் நிறுவனத்தின் புதிய ப்ராடெக்ட்-கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் முக்கியமாக Google Pixel போன்.
இந்த நிலையில் Google Pixel போன் உற்பத்தியை அதிகரித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ள கூகுள், இந்தியாவை அதிகளவில் நம்பியுள்ளது. பொதுவாக உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்றால் அனைத்து முன்னணி நிறுவனங்களும் சீனாவுக்கு செல்லும், தற்போது அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருகிறது.

அமெரிக்கா - சீனா மத்தியிலான பிரச்சனை தொடர்ந்து இருப்பதால், சீனாவின் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமாயின் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளை தேர்வு செய்துவிட்டு சீனாவை ஒதுக்கி வருகிறது.
கடந்த சில வருடங்களாக ஆப்பிள் சீனாவில் இருந்த தனது உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றி வரும் வேளையில் இதன் வழியாக கூகுள் நேரடியாக இந்தியாவுக்கு வருகிறது. கூகுள் தனது Pixel போன்-ஐ தயாரிக்க இந்தியாவில் லாவா இண்டர்நேஷ்னல், டிக்சான் டெக்னாலஜிஸ், பாக்ஸ்கான் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
கூகுள் கடந்த வருடம் சுமார் 90 லட்சம் Pixel போன்களை தயாரித்து விற்பனை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. இந்திய நிறுவனங்கள் உடனான பேச்சுவார்த்தை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீனாவுக்கும், வியட்நாம்-க்கும் பெரும் பின்னடைவாக இருக்கும்.
சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் தனது டெக் சேவைகள் அனைத்தையும் அனைத்து முனைகளிலும் தனது சொந்த ஹார்ட்வேர் மூலம் இணைப்பதன் மூலம் வலுவான வாடிக்கையாளர் சேவை, அனுபவத்தை கொடுக்க முடியும் என எதிர்பார்க்க முடியும் என கூகுள் நம்புகிறது. இந்த முயற்சி பல பிரிவில் கூகுள்-க்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications