கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, டெஸ்லா, அமேசான், மார்கன் ஸ்டான்லி போன்ற சர்வதேச அளவிலான பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுப்பது வழக்கம். ஆனால் அதற்கான பணி செய்ய வேண்டியிருக்கும்.
ஆனால் கூகுள் நிறுவனத்தில் Devon என்ற புனைபெயர் கொண்ட ஒரு ஊழியர் ஒரு நாளுக்கு ஒரு மணிநேரம் மட்டுமே பணியாற்றி வரும் வேளையில் இவர் வருடத்திற்கு 1.2 கோடி ரூபாய் அளவிலான சம்பளம் பெறுகிறார். இது மட்டும் அல்லாமல் இந்த பணியில் சேர்வதற்காக சைன்-இன் போனஸ் தொகையும் பெற்றுள்ளார், இந்த வருட இறுதியில் பர்பாமென்ஸ் போனஸ் தொகையும் எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Devon கூகுள் டூல்ஸ் மற்றும் ப்ராடெக்ட்களுக்கு கோடிங் செய்து வருகிறார், பார்சூன் பத்திரிக்கை காலை 10 - 10.30 மணி அளவில் அழைத்து பேசிய போது, தான் இன்னும் லேப்டாப் கூட திறக்கவில்லை என கூறியுள்ளார். உங்க மேனேஜர் எதுவும் கேட்க மாட்டார்களா என் கேட்டதற்கு இது வாழ்க்கையின் முடிவு இல்லை என தெரிவித்துள்ளார்.
பொதுவாக பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் டெக் ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளத்தை அள்ளிக்கொடுப்பது வழக்கம், காரணம் இந்த நிறுவனத்தில் இவர்கள் உருவாக்கும் சேவை உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் பயன்படுத்துவது என்பதால் பாதுகாப்பு முதல் பல விஷயங்களை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால் இதேவேளையில் அனைத்து ஊழியர்களுக்கும் முக்கியமானவர்களாக, அனைவருக்கும் அதிகப்படியான சம்பளம் கொடுக்க வேண்டுமா, அப்படி பல கேள்விகள் இருக்கும். இது ஒருபக்கம் இருக்க பெரிய கார்பரேட் நிறுவனங்கள் ஒரு ஊழியர் என்ன செய்கிறார்கள் என்பதை முழுமையாக தெரிந்துக்கொள்ள இது நாள் வரையில் போராடி வருகிறது.
இதேபோல் சில வாரங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் இரு ஊழியர் யார் குறைவான நேரம் பணியாற்றுகிறார்கள் என்ற சண்டையில் ஒரு நாளுக்கு 2 மணிநேரம் மட்டுமே பணியாற்றிவிட்டு 5,00,000 டாலர் அதாவது ரூபாய் மதிப்பில் 4.10 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள் என்ற செய்தி கார்ப்பரேட் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது மறக்க முடியாது. இதற்கு எலான் மஸ்க்-ம் வாவ் என கமெண்ட் கொடுத்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications