கூகுள் நிறுவனம் தங்களுடைய செயற்கை நுண்ணறிவு டேட்டா சென்டர்களுக்கு தேவையான மின்சாரத்தை அணு உலைகள் மூலம் தயாரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்காக கூகுள் நிறுவனம் கைரோஸ் பவர் (Kairos power) என்ற ஒரு நிறுவனத்தோடு புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கைரோஸ் பவர் நிறுவனம் சிறிய அணு உலைகளை அமைத்து அதிலிருந்து மின்சாரத்தை தயாரித்து வழங்கும். இந்த மின்சாரம் முழுக்க முழுக்க கூகுளின் செயற்கை நுண்ணறிவு திறன் சார்ந்த செயல்பாடுகளுக்கும் அவற்றின் டேட்டா மையங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படும்.

இதன்படி கைரோஸ் பவர் நிறுவனம் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு திறன் செயல்பாடுகளுக்கு தேவையான மின்சாரங்களை வழங்குவதற்காக 7 சிறிய அணு உலைகளை அமெரிக்காவில் அமைக்க இருக்கிறது.
உலகிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளுக்கான மின்சாரத்தை தயாரிப்பதற்கு அணு உலை பயன்படுத்துவது என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி முதல் அணு உலை 2030ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற அணு உலைகள் அனைத்தும் 2035 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 அணு உலைகளும் பயன்பாட்டுக்கு வரும்போது அவற்றின் மூலம் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.
இந்த 500 மெகாவாட் மின்சாரத்தையும் கூகுள் நிறுவனம் தங்களுடைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயல்பாடுகளுக்காக மட்டுமே பயன்படுத்த உள்ளது. இது தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் அணு சக்தி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரங்கள் பூஜ்ஜிய கார்பன் வெளியீட்டை கொண்டவை.
எனவே இவை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்பதோடு மட்டுமில்லாமல் 24 மணி நேரமும் மின்சாரத்தை தயாரிக்க கூடிய திறன் கொண்டவை, எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இப்படி ஒரு திட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் எவ்வளவு ரூபாய் மதிப்பீட்டில் கையெழுத்தாகியுள்ளது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனங்களும் இதே போன்ற ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளன. தங்களுடைய செயற்கை நுண்ணறிவு டேட்டா மையங்களுக்கான மின்சாரத்தை அணு உலைகள் மூலம் தயாரித்து பயன்படுத்த இவை முடிவு செய்துள்ளன.
அமெரிக்காவில் தற்போது பல்வேறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகின்றன. இதற்கான டேட்டா மையங்களுக்கு மிகப்பெரிய அளவிலான மின்சாரம் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது.
எனவே இது வழக்கமாக தேவைப்படும் மின்சாரத்தில் இடையூறை ஏற்படுத்தக் கூடாது என்பதால் நிறுவனங்கள் அணு உலைகளை பயன்படுத்த விருப்பம் தெரிவிக்கின்றன. ஆனால் இது போன்ற அணு உலைகளில் விபத்துகள் நேர்ந்தால் அது பெரிய ஆபத்தில் முடியும் என்பதை மறுப்பதற்கு இல்லை.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications