உலகிலேயே மிகப்பெரிய டெக் நிறுவனமாக இருக்கும் கூகுள் அடுத்தடுத்து பல மாற்றங்களையும் அதிரடி முடிவுகளையும் எடுத்து வரும் வேளையில், செவ்வாய்க்கிழமை முக்கியமான ஒரு கொள்கையை வெளியிட்டு உள்ளது. இந்த கொள்கையின் படி உலகளவில் பல கோடி கூகுள் கணக்குகள் மூடப்பட உள்ளன, இதனால் பலர் தங்களுடையை கூகுள் கணக்கை இழக்க உள்ளனர்.
பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் கணக்குகளின் தகவல்கள் திருடப்பட அல்லது முறைகேடான வழியில் திருடப்படுவதை தடுக்க முக்கியமான முடிவை எடுத்துள்ளது கூகுள். தகவல் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம் என்ற காலக்கட்டத்தில் இருக்கும் நிலையில், டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர் தரவுகளை பாதுகாப்பாக வைக்க முக்கியமான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதன் அடிப்படையில் தான் கூகுள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புதிய கொள்கையில் குறைந்தது 2 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத Google கணக்கு நீக்கப்படும் என தெரிவித்துள்ளது. முன்பு, 2 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத கணக்குகள் நீக்கப்படும் என அறிவித்திருந்தது, இப்புதிய கொள்கையின் படி குறைந்தபட்ச அளவை 2 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது.
எங்களுடைய உள்நிறுவன ஆய்வின் படி தற்போது ஆக்டிவ் ஆக இருக்கும் கணக்குகளை காட்டிலும் சுமார் 10 மடங்கு பயன்படுத்தாத கணக்குகள் உள்ளது. இவை அனைத்தும் 2-step-verification இல்லாமல் இருப்பதால் எளிதாக ஹேக் அல்லது திருடப்படலாம். திருடப்பட்ட கணக்கை வைத்து தனிநபர் தகவல் திருட்டு முதல் தவறான தகவல்களை பரப்புவது வரையில் செய்ய முடியும்.
உடனடியாக கூகுள் கணக்குகள் டெலிட் செய்யப்படாது, டிசம்பர் மாதம் முதல் தான் கணக்குகள் டெலிட் செய்யப்படுகிறது. முதலில் கணக்கை திறந்தது முதல் பயன்படுத்தாமல் இருக்கும் கணக்குகள் டெலிட் செய்யப்பட உள்ளது. இந்த நடவடிக்கையில் தனிநபர் கணக்குகள் மட்டுமே டெலிட் செய்யப்படும், பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் தொடர்பான கணக்குகள் டெலிட் செய்யப்படாது.
டெலிட் செய்யும் முன்பு பல ரிமைன்டர் அனுப்பபடும் (Primary email மற்றும் Recovery Email). கூகுள் கணக்குகள் டெலிட் செய்யப்படுவதன் மூலம் Gmail, Docs, Drive, Meet, Calendar, YouTube, Google Photos ஆகிய தரவுகள் மட்டுமே டெலிட் செய்யப்படும்.
உங்கள் கூகுள் கணக்கை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்..
2 வருடமாக பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் கணக்கில் லாக்இன் செய்து ஆக்டிவாக மாற்றுங்கள் போதும்..


Click it and Unblock the Notifications