இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஏஐ தொழில்நுட்பம் வந்திருக்கிறது என பேசினோம், பின்னர் நம்முடைய அன்றாட வேலைகளில் படிப்படியாக அதனை பயன்படுத்த தொடங்கினோம். தற்போது அனைத்து துறைகளிலும் ஏஐ தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
குறிப்பாக டெக் நிறுவனங்களில் ஏஐஉ பயன்பாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் அனைத்தும் கோடிங் உள்ளிட்ட வேலைகளை ஏஐ தொழில்நுட்பங்கள் வசம் ஒப்படைத்து விட்டன. ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களும் மனிதர்கள் இனி ஏஐ உடன் இணைந்து தான் வேலை செய்ய வேண்டும் என கூறி வருகின்றன. குறிப்பாக ஊழியர்கள் ஏஐ தொழில்நுட்பங்களை சக ஊழியராக கருதி அவற்றோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றன.

இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்ப தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்பவர்கள் , வேலைவாய்ப்பு சந்தையில் தொடர்ந்து நீடிக்கிறார்கள். அதனை செய்ய முடியாதவர்கள் வேலைவாய்ப்பு சந்தையில் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஏஐ வருகையால் ஏற்படக்கூடிய பணியிட மாற்றங்களும் , அதனால் ஏற்படக்கூடிய பணி நீக்கங்களும் தொடர்கதையாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு Voluntary exit program என்ற அவர்களாகவே வேலையை விட்டு செல்வதற்கான ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது.
அதாவது கூகுள் நிறுவனம் கூகுள் நிறுவனத்தின் தலைமை தொழில் பிரிவு அதிகாரி பிலிப்ஸ் சிலேண்டர் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். அதில் 2025 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் மிக வலுவான வளர்ச்சி அடைந்திருக்கிறது , அடுத்ததாக நாம் மிக தீவிரமாக ஏஐ தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தப் போகிறோம் நிறுவனத்தின் ஏஐ மிஷனுக்கு தயாராக இருக்கக்கூடிய ஊழியர்கள் மட்டுமே தேவை எனக் கூறியிருக்கிறார். அதாவது ஏஐ தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்காதவர்கள் தாங்களாகவே வேலை விட்டு சென்று விடலாம் என அந்த மின்னஞ்சலில் கூறியிருக்கிறார். பிசினஸ் இன்சைடர் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் இந்த மாற்றத்தோடு தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள முடியாத ஊழியர்கள் வேலையை விட்டு செல்லலாம் என கூறியிருக்கிறார் . AI First என்பதை தொழில் உத்தியாக மாற்றி இருக்கிறது கூகுள். இது உங்களுக்கு பொருந்துகிறது உங்களால் இந்த வேகத்திற்கு ஏற்ப வேலை செய்ய முடியும் என்றால் நிறுவனத்தில் இருங்கள் இல்லை என்றால் நீங்களாகவே வெளியேறி விடுங்கள் எனக் கூறியிருக்கிறார். Android, Chrome, Pixel, Nest பிரிவு ஊழியர்களுக்கு இது பொருந்தும்.
கூகுள் கடந்த ஓராண்டில் 3ஆவது முறையாக இந்த திட்டத்தை ஊழியர்களுக்கு அறிவித்திருக்கிறது. 2025 ஜூன், 2025 அக்டோபர் தற்போது 2026 பிப்ரவரி. இந்த திட்டத்தின் மூலம் ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய வேலை விட்டு சென்றுவிடலாம் அவர்களுக்கு நிறுவனம் சார்பாக குறிப்பிட்ட மாத சம்பளம், நிறுவன பங்கு உள்ளிட்டவை நிதி இழப்பீடாக வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications