மும்பை: கூகுள் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய டேட்டா சென்டரை அமைப்பதற்கான பணிகளை தீவிர படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு உலக அளவில் டிஜிட்டல் பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூகுள் தன்னுடைய டேட்டா சென்டரை, இந்தியாவில் நிறுவுவது முக்கியமானதாக கருதப்படுகிறது.
கூகுள் நிறுவனம் நவி மும்பையின் ஜூய் நகரில் 22.5 ஏக்கர் பரப்பளவில் தன்னுடைய டேட்டா சென்டரை நிறுவுவதற்கான பணிகளை தீவிர படுத்தியுள்ளது. மேலும் கூகுள் டேட்டா சென்டருக்கான நிலத்தை தேர்வு செய்துள்ளது.

தற்போது இது தொடர்பாக மகாராஷ்டிரா இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான ஒப்புதல்கள் கிடைத்துவிடும் என சொல்லப்படுகிறது.
இந்த ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் சுமார் 850 கோடி ரூபாய் மதிப்பிலான டேட்டா சென்டர் நவி மும்பை பகுதியில் அமையும்.
கிட்டத்தட்ட இந்த ஒப்பந்தமானது முடியும் தருவாயில் இருப்பதாகவும் எளிதில் அனைத்து பகுதிகளுடனும் தொடர்பு கொள்ளும் இந்த இடம் இருப்பதாலும் கூகுள் இந்த முடிவை எடுத்துள்ளது. சப்-மரைன் கேபிள்கள் மூலம் ஆசிய நாடுகளுடன் எளிதில் தொடர்பு கொள்ள ஏதுவாக இந்தியா இருப்பதே இதற்கு காரணம்.
பொதுவாக கூகுள் நிறுவனம் அலுவலகங்களை குத்தகைக்கு வாங்கி அங்கே டேட்டா சென்டர் தொடர்பான செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் முதல் முறையாக சொந்தமாக ஒரு இடத்தை வாங்கி அங்கே டேட்டா சென்டரை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் அண்மைக்காலமாக இந்தியாவில் தங்களது கவனத்தை அதிகப்படுத்தியுள்ளன. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாடு என்பது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் 5g சேவைகள் மற்றும் நமது டிஜிட்டல் உள்கட்டமைப்புகள்.
பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் நுழைந்திருக்கும் நிலையில் கூகுள் மைக்ரோசாப்ட் அமேசான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது டிஜிட்டல் சார்ந்த பணிகளை அதிகப்படுத்தி வருகின்றன அந்த வகையில் டேட்டா சென்டரை அமைப்பதற்கு மிகப் பொருத்தமான இடமாக இந்தியா இருக்கிறது.
இதன் மூலம் இந்தியா டிஜிட்டல் தரவு மையமாக மாறும் என்றும் டிஜிட்டல் சார்ந்த முதலீடுகள் இந்தியாவில் இன்னும் அதிகரிக்கும் என்றும் பல்வேறு பெரு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது முதலீட்டை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications