கூகுள் நிறுவனத்திற்கு எதிராக கலிஃபோர்னியா மற்றும் தனியார் புகார்களுக்கு அந்நாட்டு நீதிமன்றும் தீர்ப்பு வழங்கியதில் கூகுள் 155 மில்லியன் டாலரை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டது. சர்ச் இஞ்சின் நிறுவனமான கூகுள் அதன் பயனர்களுக்கு அதாவது மக்களுக்கு தங்கள் இருப்பிடங்களை (Location) எவ்வாறு கண்காணிக்கிறது மற்றும் அவர்களின் தரவை ஒப்புதல் இல்லாமல் தவறாக பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டு உள்ளது.
கூகுள் மக்களின் பர்சனல் தரவை எவ்வாறு சேகரித்து பயன்படுத்துகிறது என்பதில் கட்டுப்பாட்டை வைத்திருப்பதாக மக்களை நம்பும்படி ஆல்பபெட் இன்க் கூறியது. ஆனால் கூகுள் ஏமாற்றியதாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போது இவ்வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

மக்களை "சுயவிவரம்" அதாவது ப்ரொபைல் செய்து, அவர்களின் "இருப்பிட வரலாறு" அமைப்பை முடக்கினாலும், விளம்பரம் மூலம் அவர்களை குறிவைத்து, அவர்கள் விரும்பாத விளம்பரங்களைத் தடுக்கும் திறனைப் பற்றி மக்களை ஏமாற்ற முடியும் என்று நிறுவனம் குற்றம் சாட்டப்பட்டது.
கூகுள் பயனர்கள் "இருப்பிட வரலாறு" அமைப்பை முடக்கிய பின்பு கண்காணிக்காது என கூறுகிறது - ஆனால் அதற்கு நேர்மாறாகச் செய்து, அதன் சொந்த வணிக லாபத்திற்காக அதன் பயனர்களின் நகர்வுகளைத் தொடர்ந்து கண்காணிக்கிறது. அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் ராப் போண்டா கூறினார்.
கலிஃபோர்னியா நீதிமன்ற தீர்ப்புக்கு கூகுள் 93 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும், மேலும் அது மக்கள் இருக்கும் இடத்தை எவ்வாறு கண்காணிக்கிறது மற்றும் சேகரிக்கும் தரவைப் பயன்படுத்துகிறது என்பது பற்றி மேலும் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
இதை தொடர்ந்து தனிப்பட்ட முறையில் புகார் அளித்தவர்களுக்கு கூகுளின் 62 மில்லியன் டாலர் தொகையை செட்டில்மென்ட் ஆக கொடுக்க உள்ளது. இந்த தொகை வழக்கின் கட்டணங்களைக் கழித்த பின்பு நீதிமன்றம் ஒப்புதல் அளித்த லாப நோக்கற்ற குழுக்களுக்குச் செல்லும் என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த நவம்பரில், 40 அமெரிக்க மாநிலங்களின் இதே போன்ற குற்றச்சாட்டுகளைத் தீர்க்க கூகுள் $391.5 மில்லியன் செலுத்த ஒப்புக்கொண்டது. மவுண்டன் வியூ, கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட கூகுள் நிறுவனம் அரிசோனா மற்றும் வாஷிங்டனுடன் 124.9 மில்லியன் டாலர் தொகைக்கு மற்றொரு செட்டில்மென்ட் செய்தது.


Click it and Unblock the Notifications