கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் தங்களின் பிக்சல் ஸ்மார்ட் போன் உற்பத்தியை வியட்நாமிலிருந்து இந்தியாவிற்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அதிகப்படுத்தினார். அந்த வகையில் வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 46 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு 90 விலக்கு தந்திருக்கிறார். இந்த சூழலில் தான் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் தங்களுடைய கூகுள் பிக்சல் ஸ்மார்ட் போன் உற்பத்தியை வியட்நாமிலிருந்து இந்தியாவிற்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு இருக்கிறது.

இதற்காக ஆல்பபெட் நிறுவனம் இந்தியாவில் டிக்ஸன் டெக்னாலஜிஸ் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய ஸ்மார்ட் போன்களை மட்டுமாவது இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என ஆல்பபெட் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக டிக்ஸன் டெக்னாலஜிஸ் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளோடு ஆல்பபெட் நிறுவனம் முதல் கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்து இருக்கிறது.
வியட்நாம் மீது அமெரிக்கா 46 சதவீத வரியை விதித்துள்ளது. அதுவே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் தான் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே வியட்நாமில் ஸ்மார்ட் போனை தயாரித்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதை விட இந்தியாவில் தயாரித்து இறக்குமதி செய்யும் போது அதற்கான செலவுகள் குறையும் என ஆல்பபெட் நிறுவனம் திட்டமிடுகிறது. இது தவிர தங்களுடைய ஸ்மார்ட் போனுக்கு தேவையான பேட்டரி, சார்ஜர்கள், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளிட்டவற்றையும் இந்திய நிறுவனங்களிடமே தயாரித்து பெற்றுக் கொள்வதற்கும் கூகுள் ஆல்பபெட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போதைக்கு இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதற்கு தேவையான முக்கியமான உபகரணங்கள் அனைத்தும் இறக்குமதி செய்துதான் பயன்படுத்தப்படுகிறது. எனவே முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உபகரணங்கள் உற்பத்தி மற்றும் ஸ்மார்ட் போன் உற்பத்தி என மாற்றுவதற்கு ஆல்பபெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கூடிய விரைவில் இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ரீதியிலான பேச்சு வார்த்தை நடத்தி ஒரு பரஸ்பர ஒப்பந்தத்திற்கு வர இருப்பதால் இந்தியா மீதான வரி மேலும் குறைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆல்பபெட் நிறுவனம் திட்டமிடுகிறது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனங்களின் மூலம் உற்பத்தி செய்து வருகிறது. அதே பாணியை தற்போது ஆல்பபெட்டும் பின்பற்ற தொடங்கியுள்ளது.
ஏற்கனவே டிக்ஸன் மற்றும் ஃபாக்ஸ் தான் ஆகிய நிறுவனங்கள் கூகுள் பிக்சல் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்கின்றன. ஒரு மாதத்திற்கு 45 ஆயிரம் போன்கள் வரை உற்பத்தி செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனை மேலும் அதிகரிப்பதற்கு தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications