கூகுள் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டும் எனவும், அப்படி வரவில்லை என்றால் வேலையை விட்டு அனுப்பிவிடுவோம் என்று கூறியுள்ளது. அதாவது ஊழியர்கள் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனி ஊழியர்கள் உடனடியாக அலுவலகம் செல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
வீட்டிலிருந்தே வேலை பார்ப்பவர்கள், ஹைபிரிட் முறையில் அலுவலகத்தில் வரவேண்டும் எனவும், அனைவரும் அலுவலகம் திரும்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உலககெங்கலும் உள்ள டெக் நிறுவனங்கள் தனது ஊழியர்களை பெரும்பாலும் அலுவலகம் வந்து பணியாற்றுவதற்கான கொள்கைகளை கடுமையாக்கியுள்ள நிலையில், தற்போது கூகுள் நிறுவனமும் தனது ஊழியர்களை வரச் சொல்லி அழைப்பு விடுத்துள்ளது. அதுவும் குறிப்பிட்ட நாட்களுக்குள் வர வேண்டும் என கூறியுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்றுநோய் அன்றாட வாழ்க்கையில் பீதியையும் பேரழிவையும் கொடுத்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகின்றன. உலகம் முழுவதும் பல ஊரடங்குகள் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் WFH கொள்கையைத் தேர்வுசெய்ய நிறுவனங்களை அந்தந்த நாடுகள் கேட்டுகொண்டன. அந்த வகையில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்தன. சில நிறுவனங்கள் இன்றளவும் ஹைப்ரிட் முறையில் பணியாற்ற ஊழியர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில், பல்வேறு நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கொள்கையை முழுமையாக கைவிட்ட நிலையில், சில நிறுவனங்களில் இன்னும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பது இருந்து வருகிறது. காரணம் கொரோனா நோய்தொற்றுக்கு பின் ஊழியர்கள் யாரும் அலுவலகம் திரும்பி வர ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். இது அவர்களின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்துகிறது.
இதற்கிடையில், கூகுள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதன் முழுநேர அமெரிக்க ஊழியர்களில் சிலருக்கு அவர்களது விருப்படியே அலுவலகம் வர வாய்ப்புகளை வழங்கியது. அதாவது ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களுக்கு அருகிலுள்ள அலுவலகத்திற்குத் திரும்பலாம் என்றும் கூறியது. இதுதான் அவர்களின் ஒரே வழி என்றும் தெரிவிக்கப்பட்டது.
கூகுள் மற்றும் பல டெக் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறமைகளுக்கு ஏற்ப கணிசமான செலவு தேவைப்படும் ஏஐ-ல் அதிக அளவில் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பரவலான பணிநீக்கங்களைத் தொடர்ந்து, கூகுள் பல்வேறு குழுக்களில் இலக்கு குறைப்புகளைச் செய்துள்ளது. இது AI-ல் அதிக முதலீடு செய்வதற்கான ஏற்பாடாக உள்ளது.
பிப்ரவரியில், கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் கூறுகையில், AI ஊழியர்களிடம் ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும் வாரத்திற்கு 60 மணிநேரம் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். வேகமாக முன்னேறி வரும் AI துறையில் போட்டித்தன்மையுடன் இருக்க முயற்சிகளை டர்போசார்ஜ் செய்ய வேண்டும் என்றும் ஊழியர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications