இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்ய திட்டம்.. கூகுள் அதிரடி முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கூகுள் நிறுவனம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தினை மேம்படுத்துவதற்காக 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Google Sundar Pichai Announced a 75,000 crores | India’s Digital Economy
 

இந்த முதலீடானது படிப்படியான ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் படிப்படியாக இந்த முதலீட்டினை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று காலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் காணொளி மூலமாக கலந்துரையாடினார். இது குறித்து வெளியான செய்தியில் இந்தியாவின் டிஜிட்டல் மயத்துக்கு உதவுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலமாக இந்தியாவின் நான்கு முக்கியமான பகுதிகளில் இந்த முதலீடு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு முதலீடு

பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு முதலீடு

மேலும் இந்த மிகப்பெரிய முதலீடானது இந்தியர் ஒவ்வொருவரும், அவரவர் மொழியிலேயே தகவலை எளிதில் அணுக இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படும். இந்தியாவின் தனித்துவ தேவைகளுக்கு தகுந்தவாறு புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் கட்டமைத்தல், வர்த்தகங்கள் டிஜிட்டல்மயமாக மாற இந்த முதலீடுகள் வழி வகுக்கும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

எதற்காக முதலீடு?

எதற்காக முதலீடு?

சுகாதாரம், கல்வி வேளாண்மை ஆகிய சமூக நன்மைகளுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்த இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என்றும் சுந்தர் தெரிவித்துள்ளார்.

நான்கு வருடங்களுக்கு முன்பாக மூன்றில் ஒரு பங்கு வர்த்தகம் தான் ஆன்லைன் இருப்பைக் கொண்டிருந்தது. ஆனால் இன்றோ 26 மில்லியன் சிறு மற்றும் நடுத்தர தொழில்களை கூகுள் தேடலில் ஈடுபடுவதை காண முடிகிறது. அதோடு கூகுள் வரைபடத்தில் ஒவ்வொரு மாதமும் 150 மில்லியன் பயனாளர்களின் பங்கை கொண்டுள்ளது.

டிஜிட்டல் சாதனங்களுக்கு தேவை
 

டிஜிட்டல் சாதனங்களுக்கு தேவை

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக டிஜிட்டல் சாதனங்களுக்கு பெரிய தேவை ஏற்பட்டு வருகிறது. ட்ஜிட்டல்மயமாக்கம் மூலம் லாக்டவுன் காலகட்டங்களில் பலருக்கும் பொருட்களையும் சேவைகளையும் பெற கூகுள் பே பெரியளவில் உதவி புரிந்து வருகிறது என்றும் சுந்தர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியுடன் உரை

பிரதமர் மோடியுடன் உரை

இதே பிரதமர் நரேந்திர மோடி, சுந்தர் பிச்சையுடன் உரையாடியதில் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு பற்றி பேசியதாகவும் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய விவசாயிகளின் இளைஞர்களின் தொழில் முனைவோர்களின் வாழ்க்கையை மாற்றும் தொழில்நுட்ப ஆற்றல் குறித்து அதிகம் பேசினோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google will invest Rs.75,000 crore fund to india

Big investment in India.. Google’s CEO sundar pichai announces Rs.75,000 crore investment for India digitization fund.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X