இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது வர்த்தகத்தையும், வருமானத்தையும் அதிகரிக்க பல புது முயற்சிகளை செய்து வரும் வேளையில், விரிவாக்கத் திட்டத்திற்கான நிதியை திரட்டும் பணியை சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த நிலையில் சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுளின் தாய் நிறுவனமான Alphabet முதலீடு செய்ய இந்திய போட்டி ஆணையம் (CCI) அனுமதி வழங்கியுள்ளது.
Alphabet-ன் துணை நிறுவனம் தான் இந்த Shoreline இண்டர்நேஷ்னல் ஹோல்டிங்க்ஸ், இது உலகளவில் இருக்கும் பல பிரபலமான நிறுவனங்களின் பங்குகளை வாங்கி ஒரு ஹோல்டிங் நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. Shoreline இண்டர்நேஷ்னல் நிறுவனம் கூகுள் சேவையில் எவ்விதமான அதிகாரமும் இல்லை, இப்படியொரு கட்டமைப்பைக் கொண்ட ஒரு நிறுவனம் பிளிப்கார்ட்-இல் முதலீடு டெய்து பங்குகளை கைப்பற்ற உள்ளது.

பிளிப்கார்ட் பெங்களூரில் துவக்கப்பட்டு, நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் வர்த்தக தளமாக இருந்தாலும், இது சிங்கப்பூரில் பதவி செய்யப்பட்ட ஒரு நிறுவனம். இதேபோல் 2018க்கு பின்பு பிளிப்கார்ட் சாம்ராஜ்ஜியத்தை சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோரிடம் இருந்து அமெரிக்காவின் மிகப்பெரிய ரீடைல் சாம்ராஜ்ஜியமான வால்மார்ட் மொத்தமாக கைப்பற்றி தற்போது இந்தியாவில் மொத்த நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.
Walmart-ன் துணை நிறுவனமாகச் செயல்படும் இந்த பிளிப்கார்ட், சமீபத்திய நிதி திரட்டலில் ஈடுபட்டது. இந்த நிதி திரட்டும் சுற்றில், பிளிப்கார்ட் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியது, அதில் 350 மில்லியன் டாலர் முதலீட்டை கூகுள்-ன் Shoreline இண்டர்நேஷ்னல் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் செய்துள்ளது. இந்த முதலீட்டுக்கு தான் தற்போது சிசிஐ அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோல் சிசிஐ அமைப்பு ஜப்பான் நாட்டின் முன்னணி நிதி நிறுவனமான MUFG வங்கி இந்தியாவில் NBFC பிரிவில் முக்கிய நிறுவனமான DMI Finance Pvt Ltd-இல் முதலீடு செய்து தனது பங்கை அதிகரிக்க அனுமதி பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications